மதிப்பெண் குவிப்பால் கல்வித்தரம் மேம்படுகிறதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2014

மதிப்பெண் குவிப்பால் கல்வித்தரம் மேம்படுகிறதா?


எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி சதவீத புள்ளியும், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீத புள்ளியும் 90ஐ தாண்டி சாதனை படைத்துள்ளது.
மாணவர்கள், மதிப்பெண்களை வாரி குவித்துள்ளனர். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் 465 பேர் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். அறிவியலில் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் சென்டமும் 26 ஆயிரத்திற்கும் அதிகமாக வந்துள்ளது.தேர்ச்சி சதவீத புள்ளி அதிகரிப்பும், மாணவர்கள், அதிகளவில், மதிப்பெண் குவித்திருப்பதும், பலரின் புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது. இந்த மதிப்பெண்குவிப்பால் தமிழகத்தின் கல்வித்தரம் மேம்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரம் கருதுகிறது.

இது குறித்து கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் கூறியதாவது: ஆசிரியரும், மாணவர்களும் கடினமாக உழைத்துள்ளனர். இதனால், தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.மதிப்பெண்ணும் அதிகமாக வாங்கி உள்ளனர். ஆனாலும், கல்வித்தரம் மேம்பாடு அடைந்துள்ளது என்பதற்கு இதை ஒரு காரணமாக கருத முடியாது. பாடப் புத்தகத்தில் உள்ள பகுதியில் இருந்து தான், கேள்வி கேட்கின்றனர். அதனால், பாடப் புத்தகத்தை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வை எழுதுகின்றனர். இதனால் மதிப்பெண் அதிகரிக்கும்; தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கத்தான் செய்யும்.உண்மையான கல்வித்தர மேம்பாட்டுக்கு தேர்வு முறையை மாற்ற வேண்டும். 20 சதவீத கேள்விகளை பாட புத்தகத்திற்கு வெளியே இருந்து கேட்க வேண்டும். இந்த கேள்விகள் மாணவர்களின் சிந்தனையை தூண்டுவதாக இருக்க வேண்டும்.

இந்த கேள்விகள் பாட பொருள் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால், கேள்வி மட்டும் அதை சார்ந்து மாணவர்கள் சிந்தித்து எழுதும் வகையில் இருக்க வேண்டும்.இதுபோன்ற ஒரு முறை வந்தால் ஆசிரியர்கள் விரிவாக, பல கோணங்களில், பல விஷயங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருவர். மாணவர்களும், புதிய முறையில் சிந்தித்து, தேர்வெழுதும் திறனை பெறுவர். தற்போது, அதற்கு வாய்ப்பு இல்லை. "அ.தி.மு.க., ஆட்சியில் கல்வித்துறை சாதனை" என இந்த கட்சியினர் கூறுவர். உடனே "இந்த சாதனைக்கு நாங்கள் கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டம் தான் காரணம்" என, தி.மு.க. வினர் கூறுவர். இவ்வாறு, ராஜகோபாலன் கூறினார்.

6 comments:

  1. அரசின் கொள்கை 100% கல்வியறிவுபெற்ற மாநிலமாக மாற்றுவது அதனை நோக்கி இது பயணிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. 100% கல்வியறிவு சரிதான். அதே சமயம் கல்வியாளர் ராஜகோபாலன் சொல்வது போல மாணவர்களை சிந்திக்க செய்யாமல் முழுகல்வியறிவு பெற்று என்ன செய்வது? கல்வி என்பது சமுகத்தை அறிவதும் சிந்திப்பதும் தான் என்பது ஆசிரியர் சமூகம் கல்வித்துறையும் மறந்து செயல்படுகிறது. எதிர்கால கல்வியும் மாணவர் சமூகமும் என்னவாக போகிறது ? .............. நினைத்தால் வேதனைதான் மிச்சம். கல்விமுறை மாறவேண்டும்.

      Delete
  2. i appreciate students memory power nothing else

    ReplyDelete
  3. I strongly appriciate .we r not able to participating compitative examination like banking ,tnpsc,set,,,,,,so future generation also affecting as same method of education .

    ReplyDelete
  4. kalvi manapadam seivadhai mattumey kondal nallahukka ippadhai.kiramapura manavargal padikka vali seiya vendumey thavira nagarpura manavargalin kalvitharathaum arivaum kuraikkavey ikkalvi tharam vulladhu.kiramangalil arasu palligalaum tharamana asiriyargalaum kondu vandhu manavargalai mempaduthungal....

    ReplyDelete
  5. thaniyar palligalil asiriyar demo class, exam veithu iravu pagal kudumbam ena paramal pani seithu manavargalai vuruvakkukirargal,aanal nam arasu palligalil asirayargalukku pala vagaigalil thervai mattum veithu vittu,pala palligalil asiriyar illamal thervai eluthiya avalam imuraum nadandhadhu. aanl therchi vigitha adhigarithadhu,,,,,,eppadi?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி