ஒரே வினாத்தாளில் இரண்டு தேர்வுக்கான கேள்விகள்: பல்கலைக்கழக தேர்வில் குளறுபடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2014

ஒரே வினாத்தாளில் இரண்டு தேர்வுக்கான கேள்விகள்: பல்கலைக்கழக தேர்வில் குளறுபடி.


்அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த வேளாண் புலம் செமஸ்டர் தேர்வில், இன்று நடைபெறும் தேர்வு பாடத்திற்கான கேள்விகளும் இடம் பெற்றிருந்ததால் மாணவர்களுக்கிடையே குழப்பம் ஏற்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை வேளாண் புலம் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு, 4ம் கட்ட செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். வேளாண் பொருளாதாரம் தலைப்பில் வேளாண்மை சந்தை விற்பனை, டிரேடு மற்றும் சந்தை விலை பாடத்தேர்வு நேற்று நடந்தது. வேளாண் கல்லூரி தேர்வு மையத்தில் வழங்கப்பட்ட வினாத்தாளில், முதல் பக்கத்தில் நேற்றைய தேர்வுக்கான வினாக்களும், அதன் தொடர்ச்சியான அடுத்த பக்கத்தில் இன்று நடைபெற இருந்த வேளாண்மை விரிவாக்கம் பாடத்திற்கான கேள்விகளும் அச்சிடப்பட்டிருந்தது.இதனால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். இந்த குளறுபடி குறித்து தேர்வு கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர். அதையடுத்து, பல்கலை நிர்வாகத்தின் கவனத்திற்குகொண்டு செல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்றைய (நேற்று) தேர்வுக்கான பொருளாதார பாட கேள்விக்கு தேர்வு எழுதுங்கள், மீதமுள்ள வினாத்தாள் கொடுக்கிறோம்என கூறி, மாணவர்களை தேர்வு எழுத வைத்தனர்.பின்னர், அடுத்த பக்கத்தில் இருக்க வேண்டிய பொருளாதார பாடப்பிரிவு வினாக்களை வேறு தனி பேப்பரில் ஜெராக்ஸ் எடுத்து வந்து மாணவர்களிடம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற உள்ள வேளாண்மை விரிவாக்கப் பாடம் தேர்வுக்கான வினாத்தாள் புதிததாக தயாரித்து அச்சிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. பல்கலைக்கழக தேர்வில் நடந்த குளறுபடி மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி