
தமிழக அரசால் பலவகையான விலையில்லா பொருட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இவை குறித்த முழுமையான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லை.தமிழகம் முழுவதும் உள்ள பல அரசு பள்ளிகளின் பெயர்பலகை மிகபழையதாகவும், துருப்பிடித்தும் உள்ளது. பள்ளி பராமரிப்புக்கு ஒதுக்கப்படும் மிக குறைந்த பணத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு தேவைப்படும் பராமரிப்பு பணிகளுக்கே பற்றாகுறையாக இருப்பதால், இத்தகைய தரமான பெயர்பலகை அமைப்பது பள்ளி அளவில் சாத்தியம் இல்லை.

எனவே தமிழக அரசே மொத்தமாக கொள்முதல் செய்து இத்தகைய பெயர்பலகைகளை பள்ளி வாரியாக நிறுவி தர வேண்டும்.ஆன்மீகத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படும் இக்காலத்தில் அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதோடு அல்லாமல், அவற்றை முறையாக விளம்பர படுத்தினால் நிச்சயம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும், தரமும் கூடும். தமிழக அரசே உதவுங்கள்!
good thought....
ReplyDeleteNice thinking
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete