மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.


மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி, குழந்தைகள் கல்விச் செலவை திருப்பிக் கொடுக்கும் ஆண்டு உச்ச வரம்பு, இது வரை,12 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனிமேல், 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்று திறனாளி பெண் ஊழியரின், குழந்தை பராமரிப்பு, மாதச்செலவுத்தொகை, 1,000 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அது போல், ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தையின் கல்விச் செலவுத் தொகையை திருப்பி கொடுப்பதற்கான ஆண்டு உச்சவரம்பு தொகை, 24 ஆயிரம் ரூபாயிலிருந்து, 36 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரியில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 100 சதவீதமாக உயர்த்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.லோக்சபா தேர்தல், இறுதிகட்டத்தை நெருங்க, இன்னும், நான்கு நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசின், பணியாளர் நலத்துறை மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிமுறை களுக்கு எதிரானது என, எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி