புதிதாக சேர்ந்த அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2014

புதிதாக சேர்ந்த அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்.


தமிழக அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், கடந்த 2003 ஏப்ரல் மாதம் முதல் அமலில் உள்ளது.
இந்த ஆண்டிற்கு பிறகு, பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள், மற்றும் பணி வரன் முறை பெறாத அரசு ஊழியர்கள், சென்னையில் உள்ள தகவல் தொகுப்பு மையத்தில், ஊழியர் பெயரில், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண், பெற்றிருக்க வேண்டும். இந்த எண் பெறவில்லை என்றால், புதிய பென்ஷன் திட்டத்திற்காக, அடிப்படை சம்பளத்தில் இருந்து, பணம் பிடித்தம் செய்ய முடியாது.எனவே, இந்த எண் பெறாத அரசு ஊழியர்களுக்கு, ஜூன் மாதம் முதல் சம்பளம், நிறுத்தி வைக்க வேண்டும், என நிதித் துறை பென்ஷன் பிரிவில் இருந்து, அனைத்து கருவூல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,இதில் கருணை அடிப்படையில், பணிக்கு சேர்ந்தவர்கள் குறித்து, எந்த விதக் குறிப்புகளும் இல்லை. எனவே, பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் பெறாத, அரசு ஊழியர்களுக்கு ஜூன் மாதம் முதல் சம்பளம் கிடைக்காது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி