பீகார் மாநில குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர் நியமிக்க முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2014

பீகார் மாநில குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர் நியமிக்க முடிவு.


திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில், பள்ளி செல்லாமல் இருந்த, பீகார் மாநில குழந்தைகள், கல்வி கற்க, தேவையான நடவடிக்கைகளை, அனைவருக்கும் கல்வி திட்டஅதிகாரிகள் எடுத்துள்ளனர்.
ஏப்ரல் மாதம், அனைத்து மாவட்டங்களிலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 முதல், 14 வயதிற்குட்பட்ட, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.இதில், குடிமங்கலம் மற்றும் விருகல்பட்டி புதூரில், பீகார் மாநிலத்திலிருந்து, தினக்கூலி வேலைக்காக வந்திருக்கும் குடும்பங்களை சேர்ந்த, 16 குழந்தைகள், பள்ளி செல்லாமல் இருப்பது தெரிய வந்தது.பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் ராபின் கூறியதாவது:பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, 16 குழந்தைகளும், ஜூன் மாதம் பள்ளி திறக்கும்போது, பிற குழந்தைகளோடு, பள்ளிக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழி தெரியாததால், இந்த குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர் ஒருவரை நியமிக்க திட்டமிட்டுள்ளோம். மற்ற மாணவர்களுக்கான அனைத்து சலுகைகளும், இந்த குழந்தைகளுக்கும் வழங்கப்படும். இந்தி மற்றும் தமிழ் மொழியில்வகுப்புகள் எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி