பிறந்த வருடம் மாறியதால் ரிசல்ட் பார்க்க முடியல... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2014

பிறந்த வருடம் மாறியதால் ரிசல்ட் பார்க்க முடியல...


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த முடிவுகளை இணைய தளத்தில் பார்க்க வேண்டுமானால் மாணவர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை அப்டேட் செய்ய வேண்டும். அப்படி செய்தால் ரிசல்ட், மதிப்பெண் விவரத்துடன் கிடைக்கும்.
தஞ்சை ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 192 மாணவிகள் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதியிருந்தனர். இவர்கள் இணையதளத்தில் ரிசல்ட்பார்த்தபோது வரவில்லை. இதுகுறித்து சென்னையில் உள்ள கல்வித்துறையை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது மாணவிகளின் பிறந்த வருடத்தை 1999 என பதிவு செய்தால் ரிசல்ட் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதன்படி 192 மாணவிகளும் தங்கள் பிறந்த தேதி, மாதம் ஆகியவற்றை பதிவு செய்து வருடம் என்ற இடத்தில் அனைவருமே 1999 என பதிவு செய்தபோது ரிசல்ட் கிடைத்துள்ளது.இதுகுறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்:தேர்வுக்கு முன்னதாக அதாவது டிசம்பர் மாதத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவிகளின் பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்களை சென்னைக்கு அனுப்புவர்.அப்படி அனுப்பிய விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்தவர்கள் அனைத்து மாணவிகளுக்கும் பிறந்த வருடத்தை 1999 என தவறுதலாக பதிவு செய்துள்ளனர்.

இதனால் தான் ரிசல்ட் பார்க்கும்போதும் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. இனி மதிப்பெண் சான்றிதழிலும் இதேபோன்று வருடம் 1999 என்று வரும். ஆனால் பள்ளியில் கொடுக்கும் டிசியில் அந்தந்த மாணவிகளின் ஒரிஜினல் பிறந்த வருடம் இருக்கும். எனவே இந்த குழப்பத்தை தவிர்க்க பள்ளி நிர்வாகிகள் சென்னைக்கு சென்றுமாணவிகளின் பிறந்த வருடத்தை சரி செய்ய முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி