அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2014

அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை.


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைக் கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. பரசுராமன் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.மனு விவரம்: 1,880 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, 2-வது சிறப்பு தேர்வின் மூலம் தேர்ச்சிபெற்ற 140 கணினி பயிற்றுநர்களுக்கு பணிவரன்முறை செய்திட வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 192 கணினி பயிற்றுநர்களையும் பணிவரன்முறை செய்திட வேண்டும்.புதிதாக நியமனம் செய்யப்பட உள்ள கணினி பயிற்றுநர்களுக்கு முன்பாகவே இப்போது பணியாற்றும் கணினி பயிற்றுநர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும். 1,880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணி விதிகள் உருவாக்கிட வேண்டும்.

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளுக்கும் புதிய கணினி பயிற்றுநர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. 192 computer teacher ungaludan velai parthaarkala
    652 cs teacher ungaludan velai partharkala
    manidhabimanam vendum
    652 peruku velai neengal keatkavittalum 192 perai ungaludan serthal ungalai kuliyil thalluvargal 192 peral ondrum sadhikamudoyamal than ungalodu varukirargal
    Manasthan yarum 192 perudan ondru seramattargal

    ReplyDelete
  2. B.ed cs teacher yarum ungaludan join panna matragal after new posting new association form pannuvaga ok

    ReplyDelete
  3. O a than 192 peril lady oruvaruku sangathil post koduthiruke
    Photo bose parthomae
    Ithai eluthiyavarukku pavam ondrum theriyathu polum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி