ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாநகராட்சி பள்ளியில் தேர்ச்சி சரிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2014

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாநகராட்சி பள்ளியில் தேர்ச்சி சரிவு


ஆசிரியர்கள் பற்றாக்குறையால், வியாசர்பாடி சென்னை பள்ளியில், பிளஸ், 2 தேர்வில், தேர்ச்சி சதவீதம் சரிந்துள்ளது.
வியாசர்பாடி, கல்யாணபுரத்தில் உள்ள மாநகராட்சி சென்னை பள்ளியில், பிளஸ் 2 தேர்வை, 61 பேர் எழுதினர். அவர்களில், 23 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதுகுறித்து, மாணவர்கள் கூறுகையில், 'இயற்பியல் உள்ளிட்ட சில பாடங்கள் முழு அளவில் நடத்தவில்லை. பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதனால், பலர் தோல்வி அடைந்தனர்' என்றனர். எம்.கே.பி.நகரில் உள்ள அரசு பள்ளி யில், தேர்வு எழுதிய, 198 பேரில், 150 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். வியாசர்பாடியை சேர்ந்த ஷோபனா, 982 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில், முதலிடம் பெற்றார்.

6 comments:

  1. Arasin thavaraal pali aanathu maanavargalin padippu.

    ReplyDelete
  2. VIJAYA KUMAR SIR.Eatho oru state il tet ku rlx kuduthathu thavaru nu S C utharavu pirapithu ullathu endru sila nanbargalin cmt parthean. 
    ADU UNMAI A?
    adu entha state.? 
    entha year?
    Neengal athan copy H C il samarpitheergala? 

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஆசிரியரே இல்லாத பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி
    ---தின மலர் நாளேடு

    சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வரலாறு பாடத்திற்கு ஆசிரியரே இல்லாத நிலையில், மாணவர்கள் அப்பாடத்தில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    உத்திரமேரூர் ஒன்றியத்தில், சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வை, 91 மாணவர்கள், 85 மாணவியர் என, மொத்தம், 176 பேர் எழுதினர்.இதில், 88 மாணவர்கள், 82 மாணவியர் என, 169 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டை விட, ஐந்து சதவீதம் உயர்ந்துள்ளது.ஆனால், இந்த பள்ளியில், வரலாறு பாடம் எடுப்பதற்கு, ஆசிரியர் இல்லாமல் பணியிடம் காலியாக உள்ளது.இதனால், 10ம் வகுப்பிற்கு வரலாற்றுப் பாடம் நடத்தும் ஆசிரியர் வெங்கடேசன், பிளஸ் 2 மாணவர்களுக்கும் வகுப்பெடுக்கும் நிலை இருந்தது.
    இரு வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்தியதால், மாணவர்களின் தேர்ச்சி நிலை கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், வரலாற்று பாடப் பிரிவில் தேர்வு எழுதிய, 67 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ராம்மோகன் கூறுகையில், ''கடந்த ஆண்டு, 91ஆக இருந்த தேர்ச்சி விகிதம், தற்போது, 96 ஆக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. காலை, மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் மற்றும் ஆசிரியர், மாணவ, மாணவியரின் கடின உழைப்பே இந்த தேர்ச்சிக்குக் காரணம்,'' என்றார்.

    ReplyDelete
  5. பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் 21ம் தேதி வினியோகம்
    ---தின மலர் நாளேடு

    "பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவியருக்கு, வரும், 21ம் தேதி, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது. எட்டு லட்சம் மாணவ, மாணவியர் ஆவலுடன் எதிர்பார்த்த, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் காலை வெளியானது. இவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், வரும் 21ம் தேதி முதல், அவரவர் படித்த பள்ளிகளில் வழங்கப்படுகிறது.
    அன்று காலை முதல், வேலை வாய்ப்பு அலுவலக பதிவும் அந்தந்த பள்ளிகளிலேயே நடக்கும் என்று தேர்வு துறை அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    ReplyDelete
  6. இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு; 20 ஆயிரம் இடங்கள் "போணி' ஆகுமா?
    -- தின மலர் நாளேடு

    இரண்டாண்டு, ஆசிரியர் பயிற்சி படிப்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு, வெறும், 9,000 பேர் தான், இந்த படிப்பில் சேர்ந்தனர். இதனால், இந்த ஆண்டு, ஆசிரியர் பயிற்சி இடங்கள், பெரிய அளவிற்கு, "போணி' ஆகுமா என, தெரியவில்லை.
    மோகம் குறைந்துவிட்டது பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, "காஸ்ட்லி'யான படிப்பாக, ஆசிரியர் பயிற்சி படிப்பு இருந்தது. தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 3 லட்சம் ரூபாய் வரை, இடங்களை விற்றனர். அந்தளவிற்கு, ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, முட்டி மோதினர். கடந்த, ஐந்து ஆண்டுகளில், எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையிலான பணி நியமனம் மாறி, மாநில பதிவு மூப்பாக மாறியது. தற்போது, ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயமும் வந்துவிட்டது. முக்கியமாக, அரசு ஆரம்ப பள்ளிகளில், வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. இடைநிலை ஆசிரியர் நியமனம், மிக குறைவாக நடக்கிறது. இதனால், இந்த படிப்பு மீது, மாணவர் மத்தியில், மோகம் முற்றிலும் குறைந்துவிட்டது.

    50 பள்ளிகள் மூடல் : இதனால், ஆண்டிற்கு, 10 ஆயிரம் பேர் தான், ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்கின்றனர். "போணி' ஆகாத, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, 50க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதுபோன்ற சூழலில், நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்காக, வரும், 14ம் தேதி முதல், ஜூன், 2ம் தேதி வரை, முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும் என, இயக்குனரகம் அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும், 37, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகள், 42, தனியார் பள்ளிகள், 400ம்
    உள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும் சேர்த்து, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 6,000 இடங்கள் உள்ளன. மொத்த இடங்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. இந்த இடங்கள், எந்தளவிற்கு, "போணி'
    ஆகும் என, தெரியவில்லை.

    "சீட்' கிடைக்க வாய்ப்பு : கடந்த ஆண்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என, அனைத்திலும் சேர்த்து, வெறும், 9,000 மாணவர்கள் தான், ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்ந்தனர். இதில், அரசு பள்ளிகளில், 2,100 பேர் சேர்ந்தனர். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு, சேர்க்கை குறையுமா, அதிகரிக்குமா என, தெரியவில்லை. எனினும், சேரும் மாணவர்களில், பெரும்பாலானோருக்கு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தாராளமாக, "சீட்' கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி