ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் மனக்குமுறல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2014

ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் மனக்குமுறல்!


மாணவர்களுக்கான வகுப்பறை வேலை நாட்கள் என அரசு அறிவித்து அது கையேடாகவும், நாட்காட்டியாகவும் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.அதன்படியே வகுப்புகள், தேர்வுகள் நடைபெற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பாடத்தையும், பதினோராம் வகுப்புமாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பாடத்தையும் முன் கூட்டியே பயிற்றுவிக்கக் கூடாது என்றும் அந்தந்த வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த வகுப்புப் பாடப் புத்தகங்களைத் தான் கற்பிக்க வேண்டுமெனவும் ஆணை பிறப்பித்துள்ளது அரசு.இந்நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு இன்னமும் ஆரம்பிக்காத போது, இப்போதே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 75% சதவீத பாடங்கள் முடிக்கப்பட்டுவிட்டன. மாணவ மாணவியர் சர்வ சாதாரணமாக பள்ளி சீருடையில் கோடை விடுமுறை நாட்களில்இப்போது பள்ளிக்கு சென்று வருகின்றனர். இது சரியா? இதை அரசும் ஊக்குவிக்கிறதா? அல்லது அதிகாரிகள் தெரியாதது போல் இருக்கிறார்களா என்று புரியவில்லை.

ஒரு கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்களில் மட்டும் பயிற்றுவித்து மாணவர்களின் திறனை சோதிக்காமல்,கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக பாடம் நடத்தி, சிறு சிறு தேர்வுகள் வைத்து மாணவர்களை அதுவும் நன்றாக படிக்கக் கூடிய மாணவர்களை மட்டும் பள்ளியில் சேர்த்து தேர்ச்சிசதவீதத்தை கூறி தம்பட்டமடித்துக் கொள்வது கோமாளித்தனம் மட்டுமன்றி வேறென்ன?இதையே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்ய இயலுமா? விடுமுறை நாளில் ஒரு நாள் சிறப்புவகுப்பு எடுத்தாலும் குற்றமாக கருதப்படும்.ஆசிரியர்கள் வந்து காத்திருந்தாலும் மாணவ்ர்கள் வருவது இல்லை.பெற்றோரும் அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை. இவ்வளவிற்கும் தனியார் பள்ளிகளைப் போல இல்லாமல் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஓராண்டே பாடம் நடத்தப்படுகிறது. பள்ளி வேலை நாட்களில் மாணவர்கள் வரவில்லை என்றாலும் கண்டிக்க முடியவில்லை. நிறைய மாணவர்கள் கிட்டத்தட்ட 2 மாதங்கள் கூட பள்ளிக்கே வராமல் நேராக அரசுப் பொது தேர்விற்கு செல்லும் அவலமும் தொடர்கிறது. இதையெல்லாம் தனியார் பள்ளிகளில் அனுமதிப்பார்களா?அரசுப் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் இன்னமும் குறை கூறும் புண்ணியவான்களுக்கு....இன்னமும் நாங்கள் தனியார் பள்ளிகள் ஒதுக்கித் தள்ளுகிற ஏழை மாணவர்களுக்குத் தான் கற்பிக்கிறோம். அவர்களது குடும்ப சூழலையும், பொருளாதார சூழலையும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பள்ளிக்கே வரமாட்டேன், கூலி வேலைக்கும், கொத்தனார் வேலைக்கும்,செங்கல் சூளை வேலைக்கும் தான் செல்வேன் என அடம்பிடிக்கிற மாணவர்களை, பள்ளிகளுக்கு பெரும்பாலான நாட்கள் வருகை தராத மாணவர்களைத் தான் நாங்கள் முடிந்த அளவிற்கு பயிற்சி அளித்து அரசுத் தேர்வுக்கு அனுப்புகிறோம்.குறைவான அளவே, அவர்களால் படிக்க முடிந்த அளவு எழுத முடிந்த அளவு கொடுத்து, அவர்களை எங்கள் செலவில் நிறைய நோட்டு,பேனா, ஃஸெராக்ஸ், கையேடுகள் மற்றும் மாலை நேர சிற்றுண்டிகள் அளித்து ஊக்குவித்து கிடைக்கிற வகுப்பறைகளையும், மரத்தடிகளையும் பயன்படுத்தி படிக்க வைக்கிறோம்.கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 75 சதவீத அளவிற்கு ஆசிரியர்கள் மாநில அளவிலான தகுதித்தேர்வின் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அரசுப் பள்ளிகள் என்றாலே ஆசிரியர்கள் தரமில்லை என ஒட்டுமொத்தமாக் கூறுவதை நிறுத்துங்கள். அந்தக் கூற்று இப்போதுஆர்வத்தோடும், அர்ப்பணிப்பு மனப்பான்மையோடும் பணியாற்றக் கூடிய பெரும்பாலான இளைய ஆசிரிய சமுதாயத்தின் மனதை வலிக்கச் செய்யும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறமையற்றவர்கள் எனில் தனியார்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அவர்கள் உதவியை நாடி வருவது ஏன்? ட்யூஷன் எடுக்க மாட்டேன் என சொன்னாலும் இலவசமாக வீட்டிற்கு வந்து உதவியைப் பெறும் மாணவர்கள் எத்தனை பேர் தெரியுமா?சரி அதை விடுங்கள். எத்தனை தனியார் பள்ளிகள் அரசு ஆசிரியர்களை, அல்லது ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர்களை தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அழைக்கிறார்கள் தெரியுமா?ஒரு மணி நேரம் பயிற்சி அளித்தால் 3000 ரூபாய் வரை அளிப்பதாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களின் தனியார் பள்ளிகள் என்னை அணுகின. நான் ஒரு போதும் அதைச் செய்வது இல்லை. அன்போடு மனம் நோகாதவாறு தவிர்த்துவிடுவேன்.பெருமைக்காகச் சொல்லவில்லை.நான் மட்டுமல்ல.இன்னும் திறமையான நிறைய அரசு ஆசிரியர்கள் இந்தத் தவறை செய்வதில்லை.

எனக்கு அரசு சம்பளம் தருகிறது என்பதை விட என் மாணவர்கள் எனக்கு சம்பளம் தருகிறார்கள் என்ற எண்ணமே இன்று பெரும்பாலான அரசு ஆசிரியர்களின் மனதில் வேறூன்றிவிட்டது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இப்போது தகுதித் தேர்வு வைத்தாலும் வெல்லப் போவது அரசுப் பள்ளி ஆசிரியர்களே. படித்தலும், புதுப்பித்துக் கொள்வதும், "மாநில அளவிலான போட்டித் தேர்வில்" வெற்றி பெறுவதும் அவர்களுக்குப்புதிதல்ல.திறமை தனியாரிடம் தான் இருக்கிறது எனக் கூவும் நண்பர்கள் அவர்களை போட்டித் தேர்வு எழுதச் சொல்லிஅரசுப் பணிக்குச் செல்ல ஆலோசனை சொல்லுங்களேன்.ஒரு மாற்றதிற்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை ஒரு வாரம் அரசுப் பள்ளிகளில் பணியாற்றச் சொல்லுங்களேன். நாங்கள் அவர்கள் பள்ளிகளுக்குச் சென்று 'சகல' வசதிகளோடு பணியாற்றி வருகிறோம். அதற்கான சம்பளத்தையும் கொடுத்து விடுகிறோம்.ஏன் இவ்வளவு தைரியமாக சொல்கிறேன் என்றால், இன்றைக்கு சிறப்பு தகுதி உள்ள அத்தனை ஆசிரியர்களும் தனியார் பள்ளிகளில் பணியாற்றி விட்டு வந்தவர்கள் தான். ஆனால் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி பாதியிலே விட்டுவிட்டு தனியார் பள்ளிகளில் பணியாற்றுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.அரசுப் பள்ளி மாணவர்கள் அன்பிற்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள்.

தனியார் பள்ளிகளைப் போல தண்டனை, தண்டம் கட்டுதல், பெற்றோரை அழைத்து வரச் சொல்லி மிரட்டுதல், சரியாகப் படிக்காவிட்டால் நீக்குதல் என்ற மனிதாபிமானமற்ற அராஜகங்களை இங்கே செயல்படுத்துவதில்லை.சுருக்கமாகச் சொன்னால் அரசுப் பள்ளிகள், எந்திரங்களை உருவாக்குவதில்லை. அப்துல்கலாமைப் போல், மயில்சாமி அண்ணாதுரை அவர்களைப் போல் மாண்புமிக்க சமுதாயம் போற்றும் மனிதர்களை மட்டுமே உருவாக்குகிறது.

12 comments:

  1. yes its true .........i accept.......

    ReplyDelete
    Replies
    1. very very correct sir..very very good..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. WHEN I READ THIS GOVT TEACHER'S KUMARAL I BEGIN TO CRY.
      THIS KUMARAL IS COMMEN TO ALL GOVT TEACHERS. GOVT TEACHERS KAIKAL KATTAPPATTU ULLATHU.

      Delete
  2. ஆசிரியரே இல்லாத பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி
    ---தின மலர் நாளேடு

    சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வரலாறு பாடத்திற்கு ஆசிரியரே இல்லாத நிலையில், மாணவர்கள் அப்பாடத்தில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    உத்திரமேரூர் ஒன்றியத்தில், சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வை, 91 மாணவர்கள், 85 மாணவியர் என, மொத்தம், 176 பேர் எழுதினர்.இதில், 88 மாணவர்கள், 82 மாணவியர் என, 169 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டை விட, ஐந்து சதவீதம் உயர்ந்துள்ளது.ஆனால், இந்த பள்ளியில், வரலாறு பாடம் எடுப்பதற்கு, ஆசிரியர் இல்லாமல் பணியிடம் காலியாக உள்ளது.இதனால், 10ம் வகுப்பிற்கு வரலாற்றுப் பாடம் நடத்தும் ஆசிரியர் வெங்கடேசன், பிளஸ் 2 மாணவர்களுக்கும் வகுப்பெடுக்கும் நிலை இருந்தது.
    இரு வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்தியதால், மாணவர்களின் தேர்ச்சி நிலை கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், வரலாற்று பாடப் பிரிவில் தேர்வு எழுதிய, 67 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ராம்மோகன் கூறுகையில், ''கடந்த ஆண்டு, 91ஆக இருந்த தேர்ச்சி விகிதம், தற்போது, 96 ஆக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. காலை, மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் மற்றும் ஆசிரியர், மாணவ, மாணவியரின் கடின உழைப்பே இந்த தேர்ச்சிக்குக் காரணம்,'' என்றார்.

    ReplyDelete
  3. இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு; 20 ஆயிரம் இடங்கள் "போணி' ஆகுமா?
    -- தின மலர் நாளேடு

    இரண்டாண்டு, ஆசிரியர் பயிற்சி படிப்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு, வெறும், 9,000 பேர் தான், இந்த படிப்பில் சேர்ந்தனர். இதனால், இந்த ஆண்டு, ஆசிரியர் பயிற்சி இடங்கள், பெரிய அளவிற்கு, "போணி' ஆகுமா என, தெரியவில்லை.
    மோகம் குறைந்துவிட்டது பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, "காஸ்ட்லி'யான படிப்பாக, ஆசிரியர் பயிற்சி படிப்பு இருந்தது. தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 3 லட்சம் ரூபாய் வரை, இடங்களை விற்றனர். அந்தளவிற்கு, ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, முட்டி மோதினர். கடந்த, ஐந்து ஆண்டுகளில், எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையிலான பணி நியமனம் மாறி, மாநில பதிவு மூப்பாக மாறியது. தற்போது, ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயமும் வந்துவிட்டது. முக்கியமாக, அரசு ஆரம்ப பள்ளிகளில், வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. இடைநிலை ஆசிரியர் நியமனம், மிக குறைவாக நடக்கிறது. இதனால், இந்த படிப்பு மீது, மாணவர் மத்தியில், மோகம் முற்றிலும் குறைந்துவிட்டது.

    50 பள்ளிகள் மூடல் : இதனால், ஆண்டிற்கு, 10 ஆயிரம் பேர் தான், ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்கின்றனர். "போணி' ஆகாத, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, 50க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதுபோன்ற சூழலில், நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்காக, வரும், 14ம் தேதி முதல், ஜூன், 2ம் தேதி வரை, முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும் என, இயக்குனரகம் அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும், 37, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகள், 42, தனியார் பள்ளிகள், 400ம்
    உள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும் சேர்த்து, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 6,000 இடங்கள் உள்ளன. மொத்த இடங்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. இந்த இடங்கள், எந்தளவிற்கு, "போணி'
    ஆகும் என, தெரியவில்லை.

    "சீட்' கிடைக்க வாய்ப்பு : கடந்த ஆண்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என, அனைத்திலும் சேர்த்து, வெறும், 9,000 மாணவர்கள் தான், ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்ந்தனர். இதில், அரசு பள்ளிகளில், 2,100 பேர் சேர்ந்தனர். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு, சேர்க்கை குறையுமா, அதிகரிக்குமா என, தெரியவில்லை. எனினும், சேரும் மாணவர்களில், பெரும்பாலானோருக்கு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தாராளமாக, "சீட்' கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
  4. .low pass percentage in govt schools not only due to the poor performance of the teachers but many govt schools has no / less numbers of teacher.and poor infrastructure . One section of teachers are doing. Well like above and same will be appreciated. However the majar teachers are neglecting their duty.

    ReplyDelete
  5. THE SHAME of a TEACHER is to take tuition to the low scorers & framing the best xerox machine (the high scorers)

    ReplyDelete
    Replies
    1. 450 ku meala edutha students ku mattum admission pottu 1100 ku meala vanga vaipathu periya visayama?4 aata 3 aata 300 mark 175 mark 250 mark eduthavangaluku admission potu pass seiya vaipathu periya visayama?

      Delete
    2. private school meanmai yanavarkalai meanmai aakukinrathu..but govt school low studentssa meanmai aakukinrathu..

      Delete
  6. 100% true ,super article news paper LA potta innum super ah irukkum

    ReplyDelete
  7. dashகெட்ட ஒரு அரசு ஆசிரியரின் ஆணவத்தின் உட்சம்:
    எல்லாம் ok,
    "அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இப்போது தகுதித் தேர்வு வைத்தாலும் வெல்லப் போவது அரசுப் பள்ளி ஆசிரியர்களே.

    ஒரு மாற்றதிற்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை ஒரு வாரம் அரசுப் பள்ளிகளில் பணியாற்றச் சொல்லுங்களேன். நாங்கள் அவர்கள் பள்ளிகளுக்குச் சென்று 'சகல' வசதிகளோடு பணியாற்றி வருகிறோம். "
    இந்த ஒரு இடம் தான் ரொம்ப நெருடலா இருக்கு, அரசுப்பள்ளியில் வேலைசெய்வதால் நீங்கள் அதிமேதாவி என்றும் உங்களுக்கு ரெண்டு கொம்பு முளைத்திருக்கிறது என்று நினைக்காதீர்கள். உங்களைப்போன்று ஆசிரியர் சமூகத்தில் ஆணவத்தில் விஷத்தை விதைக்கும் விரோதிகளிடம்(அரசுப்பள்ளி ஆசிரியராகவோ அல்லது தனியார்பள்ளி ஆசிரியராகவோ இருக்கலாம்) பயிலும் மாணவர்களின் கதியை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இப்பொழுது தான் புரிகிறது ஊழலின், தீமையின் வேரை யார் விதைக்கிறார்கள் என்று. எங்களின் வரிப்பணத்தில் இருந்து வாங்கும் சம்பளத்திற்கு நல்லா வேல பாக்குறீங்க very Good.
    : நீங்கள் உங்களைப் பற்றி பீத்திக்கொண்டு ஊதிய trumpet (blowing one's own trumpet) பிளிருககிறது. நல்லது செய்யுங்கள், நல்லது செய்ய தூண்டுங்கள், பிறரை இழிவாக எண்ணி தலைக்கணத்தில் ஆடாதீர்கள்.
    குறள் 978:
    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து.
    கலைஞர் உரை:
    பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.
    மு.வ உரை:
    பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
    சாலமன் பாப்பையா உரை:
    பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.
    Translation:
    Greatness humbly bends, but littleness always
    Spreads out its plumes, and loads itself with praise.
    Explanation:
    The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.
    பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கண்ணீர் கதைகள் உங்களைப் போன்ற அரக்கர்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். தனியார் பள்ளிகளில் பணிபுரியாத எவனுக்கும் அந்த வலி தெரியாது. வாழ்க உங்கள் சேவை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி