அரசு சம்பளத்தை வாங்கி ஆன்லைன் வியாபாரத்துல ஆசிரியருங்க இறங்குறாங்க...’ - பீட்டர் மாமா Dinakaran - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2014

அரசு சம்பளத்தை வாங்கி ஆன்லைன் வியாபாரத்துல ஆசிரியருங்க இறங்குறாங்க...’ - பீட்டர் மாமா Dinakaran


ஸ்கூல் அட்மிஷன் குதிரைக் கொம்பான்னா இருக்கு...எங்க பார்த்தாலும் முதல் நாளே தட்கல் டிக்கெட்டுக்கு துண்டு போட்டு படுத்துக்கற மாதிரி,
பெத்தவங்க கால்கடுக்ககாத்திருக்கறதை பார்த்தா வேதனையா இருக்கு...’ என்று சுசீலா மாமி சொன்னதை கேட்டபீட்டர் மாமா, எல்லாம் பிசினஸ் மாதிரி இதுவும் ஆயிடுச்சு...இலவச கல்வின்னா யாருமதிக்கறாங்க...’ என்றார்.‘சிஎம் இதுல கடுமையா நடவடிக்கை எடுக்கணும்....’‘நீ சிஎம் நடவடிக்கைன்னு சொன்னப்புறம் ஒரு சேதி பத்தி சொல்லியே ஆகணும்...பெண்கள் விஷயத்துல அரசு அதிகாரிகளானாலும், அமைச்சருங்களானாலும் தப்பு பண்ணினாங்கன்னு தெரிஞ்சுதுன்னா சிஎம்.க்கு கடும் கோபம் வந்துடுது...உடனே தலையிட்டு ஆக்ஷன் எடுத்துடறார். இப்படி ஏற்கனவே, அமைச்சருங்க, அதிகாரிங்க பட்டியல் இருக்கு. இந்தநிலைல, கோட்டைல ஒரு விஷயம் பரபரப்பாக கிசுகிசுக்கறாங்க. பெரிய்ய அதிகாரி ஒருத்தரு பெண் விஷயத்துல மாட்டிக்கிட்டிருக்காராம். அவரோட ஒய்ப் கூட புகார் தர முடியாமல் தவிக்கறாங்களாம். இந்த அதிகாரியோட நெருக்கமா இருக்கறது அவரு உறவுக்கார பெண்ணு தானாம்.

இப்ப சிஎம் செல் வரைக்கும் வந்திருச்சுன்னு தகவல். நடவடிக்கை நிச்சயம்ன்னு அதிகாரிங்க மத்தியில பேசிக்கறாங்க....‘இன்னும் ரெண்டு நாள் தானே, ஒரே பரபரப்பா இருக்குமில்லே...’‘ஆமாமா...அதுலயும்அதிமுக தரப்பு, செம டென்சன்ல இருக்காங்களாம். கொடநாட்டுலர்ந்து சிஎம் வர்றப்போ,சென்னைல தயாராக காத்திருக்கணும். எந்த நேரம் அழைப்பு வரும்ன்னு தெரியாது, யாருகூப்பிடுவாங்கன்னு தெரியாது. வெளியூர்ல இருந்தா ஆக்ஷன் பாயும். அதனால மத்த ஸ்டேட்டுக்கு சுற்றுலா போனவங்க கூட திரும்பி வந்திண்டிருக்காங்களாம்.

அவங்க தான் அலர்றாங்கன்னா, கோட்டைல அதிகாரிங்களும் கூட அலறல் தானாம். கொடநாட்டுல இருந்தபோது, கோட்டைல எந்த அதிகாரி எப்படின்னெல்லாம் கூட உளவுத்துறை ரிப்போர்ட்தயாரிச்சு வச்சிருக்காம். அதை கூட சிஎம்க்கு அனுப்பப்போறாங்களாம். எப்படியிருக்கு பாரு...‘பிளஸ்2வுல சாதனை புரிஞ்ச பள்ளிங்க பத்தி தான் பெருசா போட்டாங்க, ஒருத்தரு கூட பாஸ் ஆகாத பள்ளிங்க இருக்கே. அது பத்தி பெரிசா வரலியே. நான் சொல்றது என்னான்னா, இதுக்கு காரணம் ஆசிரியருங்க தான்...’‘கரெக்டா சொன்னே...மதுரை மாவட்டத்துல சுத்து வட்டார பகுதிகள்ல ஆசிரியருங்க என்ன பண்றாங்க தெரியுமா? ஆன்லைன் பொருட்களை எல்லாம் வீடு வீடா டெலிவரி பண்ணி பணம் சம்பாதிக்கறாங்களாம். இதுனால, ஸ்கூலுக்கு தலை காட்டிட்டு பசங்கள வீட்டுக்கு அனுப்பிடறது தான் நடந்துச்சாம். தேர்ச்சி விகிதம் இந்த பகுதிகள்ல குறைவானதுக்கு ஆசிரியருங்க தான் காரணமாம்.

அரசு சம்பளத்தை வாங்கி ஆன்லைன் வியாபாரத்துல இறங்குறாங்களே, இவங்க மீது ஆக்ஷன் எடுத்தால் இனியாவது பெயில் எண்ணிக்கை குறையும்; பசங்க தப்பிச்சிடுவாங்க... செய்வாங்களா அதிகாரிங்க...‘மதுரைல அழகர் ஆத்துல இறங்கறாரே...’‘ஆங்...இப்ப மதுரை பத்தி இன்னொரு விஷயம் இருக்கு. மாநகராட்சில மொட்டை பெட்டிஷனுக்கு குறைச்சல் இல்லையாம். யாரை பத்தி வேணுமின்னாலும் எழுதிடறாங்களாம். கார்ப்பரேஷன் உதவி ஆணையரு மீது இப்படித்தான் ஏகப்பட்ட கம்ப்ளெயின்டுங்க. இதுல தமாசு என்ன தெரியுமா...நடவடிக்கை எடுக்கவும்ன்னு நோட் போட்டு அவருக்கே சில அதிகாரிங்க ரீ டைரக்ட் பண்றது தான். ஊழியருங்க சில பேரு இத சொல்லி விழுந்து விழுந்து சிரிக்கறாங்க...‘நீ அழகர் பத்தியா சொன்னே...ஆபிஸ்ல ஏகப்பட்ட வேலை இருக்கு லீவெல்லாம் போட முடியாது’ன்னு சொல்லி கிளம்பினார் பீட்டர் மாமா.

2 comments:

  1. If govt give first preference for mbbs and b.e for govt schools only, all want to join in govt school. they are not going to private schools

    ReplyDelete
    Replies
    1. Ivvlo naval enga sir irunteenga? Unga moolaya konjam kodunga museumla kekkuranga.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி