TNTET: டி.இ.டி., - 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு: 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2014

TNTET: டி.இ.டி., - 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு: 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்படுகிறது.


ஆசிரியர் தகுதி தேர்வு, இரண்டாம் தாளில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் தேர்வர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது.
இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத மதிப்பெண் சலுகையை, தமிழக அரசு வழங்கியதால், இரண்டாம் தாளில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும், 28 மையங்களில், வரும்12ம் தேதி வரை, இப்பணி நடக்கிறது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிட, புதிய முறையை பின்பற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

எனவே, தேர்வுக்கான மதிப்பெண் குறித்து, தமிழக அரசு புதிய முடிவு எடுக்காததால், தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரிபார்க்குமாறு, அலுவலர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்.பி.,) உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு முறைக்கு, புதிய மதிப்பெண் முறையை அறிவித்தபின், 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் வெளியாகும்.

1 comment:

  1. Please all selected candidates under PG tamil medium priority quota 2011-12 for history, economics, Commerce write a pray petition to CM cell atonce requesting appointment orders with a down loaded attached copy of TRB SELECTION intimation letter to force the TRB / Pallikalvithuarai . since I hope that the Mass pray letter to CM cell for same matter may do some thing.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி