TNTET: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நாளை தொடங்குகிறது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2014

TNTET: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நாளை தொடங்குகிறது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தகவல்.


புதுக்கோட்டைமே 5:புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2ல் தேர்ச்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நாளை தொடங்குகிறது என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2013-ம் ஆண்டில் ஆசிரியர்தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அத்தேர்வில் அரசு அறிவித்துள்ள தளர்வு மதிப்பெண் பெற்று தாள் -2ல் தேர்ச்சி பெற்றுள்ள 548 நபர்களுக்கு புதுக்கோட்டை ஸ்ரீ பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளிவளாகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நாளை 6-ந்தேதி(செவ்வாய் கிழமை) முதல் தொடங்குகிறது.இதில் தகுதித் தேர்வு தாள் -2ல் தேர்ச்சிபெற்ற 548 நபர்களுக்கு 06.05.2014(செவ்வாய்கிழமை) 07.05.2014 (புதன்கிழமை) 08.05.2014(வியாழக்கிழமை)மற்றும் 09.05.2014(வெள்ளிக்கிழமை) ஆகிய நான்கு நாட்கள் சான்றிதழ்சரிபார்ப்பு பணிநடைபெறவுள்ளது.எனவே ஆசிரியர்தகுதித்தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றவர்கள் அழைப்புக் கடிதம் ஆளறிசான்று மற்றும் உரிய ஆவணங்களை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ளபடி அசல் மற்றும்சான்றொப்பமிடப்பட்ட நகல் சான்றிதழ்களுடன் மூன்று பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் அவரவர்க்கு அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதியில் காலை 9.30 மணிக்கு மேற்குறிப்பிட்ட முகவரிக்கு வருகை புரிந்திட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல்தேர்ச்சி பெற்று அழைப்புக் கடிதம் பெற இயலாதவர்கள் உரிய ஆவணங்களுடன் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தியாக்கம்:
கி.வேலுச்சாமி பட்டதாரி ஆசிரியர்(அறிவியல்)
முதன்மைக்கல்வி அலுவலரின் செய்தித்தொடர்பாளர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
இராப்பூசல்-புதுக்கோட்டை(மாவட்டம்).

28 comments:

  1. congrats to all cv 2013 relaxation candidates , plz pray for urimaikaka poradum 2012 relaxation candidates.

    ReplyDelete
    Replies
    1. hai friend ;;;;;:eda othukeedu murai yentral yenna??????????? pls answer tel

      Delete
    2. hai friend ;;;;;:eda othukeedu murai yentral yenna??????????? pls answer tel

      Delete
    3. முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம்: ஜூன் மாதத்திற்கு பிறகே நடவடிக்கை
      ‍‍‍‍-- தின மலர் நாளேடு

      முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர் கள், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை (டி.ஆர்.பி.,), நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர்.

      அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம், ஓராண்டாக இழுபறியில் இருந்து வருகிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்து விட்டது; இதர பாடங்களுக்கு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, தேர்வர்கள், கடந்த வாரம், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நேற்றும், பல மாவட்டங்களில் இருந்து வந்த, 100 பேர், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரை சந்தித்து பேசினர். அப்போது, ''சென்னை உயர்நீதிமன்றத்தில், பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தற்போது, உயர்நீதிமன்றத்திற்கு, கோடை விடுமுறை. ஜூன் மாதம் தான், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். வழக்கை விரைந்து முடித்து, இறுதி பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, விபு நய்யார் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து தேர்வர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

      Delete
    4. செமஸ்டர் வாரியான மார்க் பட்டியல் அவசியமா?
      ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி விளக்கம்
      --- தி இந்து நாளேடு

      ஆசிரியர் தகுதித்தேர்வில் பட்ட தாரி ஆசிரியர்கள் கூடுத லாக 24,650 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கி 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதில் பட்டப் படிப்புக்கான ஒட்டு மொத்த மதிப்பெண் சான்றிதழுடன் செமஸ்டர் வாரியான மதிப் பெண் சான்றிதழ்களும் கேட்கப் பட்டுள்ளன.
      இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது-
      தேர்வர்கள் 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு படித்துள்ளார்களா? என்பதை ஆய்வுசெய்வே செமஸ்டர் வாரியான மதிப்பெண் பட்டியல்களை சமர்ப்பிக்கச் சொல்லி யுள்ளோம். ஒருவேளை அவை இல்லாவிட்டால் அதுதொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு தேர்வர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமாக உறுதிமொழியும் எழுதிகொடுக்க வேண்டியதிருக்கலாம்.
      செமஸ்டர் வாரியாக மதிப் பெண் சான்றிதழ்களை சமர்ப் பிக்காத காரணத்திற்காக யாரும் நிராகரிக்கப்பட்டு விடமாட்டார் கள். அதேபோல், சாதி சான்றிதழில் பெயரில் சிறுசிறு எழுத்துப்பிழைகள் இருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் காரணமாக யாரும் நிராகரிக் கப்பட மாட்டார்கள்.
      இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

      Delete
  2. நாட்ல அதிகாரிங்கலாம் இருக்காங்களா இல்லையா?? நாளைக்கு இட ஒதுக்கீட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கப் போவுது... புதிய முறை னு ஒன்னு சொல்றாங்க அதுக்கு ஒரு அரசாணையப் போடலாம் ல.. எங்க கண்ணு முன்னாடி வெயிட்டேஜ் மார்க் போட்டு சரிபார்க்க சொல்லி கையெழுத்து வாங்குனீங்க.. இப்ப நாங்களே உங்க வெயிட்டேஜ பாத்து வெப்சைட் ல போடுவோம் னு சொல்லுரிங்க... எப்படிய்யா உங்கள நம்புறது?? காசு பணம் துட்டு மனி மனி னு எதுவும் நடந்தா என்னய்யா பண்றது..??

    ReplyDelete
    Replies
    1. இவஞ்ஞ எதவேனாலும் செய்வாங்கோ.போண தடவையும் எதை செஞ்சாங்கன்னு தெரியலையே ஐயே ஐஐஐயோ

      Delete
    2. trb totally waste, dead.
      teacher'a a polamba vittutanungale............!!!!!!!!!!!!!!!!!!!
      govt mela niraya thappu iruku,

      Delete
  3. பாட வாரியாக தேர்ச்சி விவரப் பட்டியல்: டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர் எதிர்பார்ப்பு
    மதுரை: 'பாடங்கள் வாரியான தேர்ச்சி விவரப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்,' என, டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், 150க்கு 90 மதிப்பெண் பெற்றவர் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்பட்டனர். பின், தேர்ச்சி பெற 82 மதிப்பெண்ணாக குறைத்து தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, கடந்தாண்டு ஆக.,17 மற்றும் 18 ல் நடந்த, டி.இ.டி., தேர்வுகளில்
    மட்டும் 72 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இதில், தாள் 2ல், தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. ஆனால், காலிப் பணியிடங்கள் 16 ஆயிரம் மட்டுமே உள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது. இதனால், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வாய்ப்பு என்பது சாத்தியமில்லை. ஆனால், அறிவித்துள்ள காலிப் பணியிடங்களில், தமிழ், ஆங்கிலம் என பாட வாரியான காலியிடங்கள் எண்ணிக்கை மற்றும் டி.இ.டி., தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை, விவர பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும். இந்த விவரம் தெரிந்தால் தான், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு, எப்போது பணி நியமனம் கிடைக்கும், என அவர்களால் தெரிந்துகொள்ள முடியும். இது தெரியாமல் தற்போது, டி.இ.டி. தேர்ச்சி பெற்றிருந்தும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, பல லட்சம் ரூபாய் 'பேரம்' பேசப்படும் நிலை உள்ளது.

    இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இடஒதுக்கீடு அடிப்படையிலான காலிப் பணியிடங்கள் மற்றும் பாட வாரியான டி.இ.டி., தேர்ச்சி விவரப் பட்டியலை வெளியிட வேண்டும், என்று தேர்ச்சி பெற்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களின் பாட வாரியான தேர்ச்சி விவரம், அரசு அறிவித்துள்ள காலிப் பணியிடங்களில், பாட வாரியான காலியிடங்களின் விவரத்தை வெளியிட்டால் தான், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வெளிப்படை தன்மை தெரியும், என்றார்.

    ReplyDelete
  4. Vacancy List Podrathula Enna Problem ???
    Singamuthu Solra mathiri...Yogiyannukku irrutulla Enna Velai ???
    Vacancy Details Therinji Podala Apdina Enna Artham ???

    ReplyDelete
  5. Dear kalviseithi friends... is consolidate mark sheet must in cv? It is not given to us.... waiting for reply

    ReplyDelete
  6. Dear kalviseithi friends... is consolidate mark sheet must in cv? It is not given to us.... waiting for reply

    ReplyDelete
    Replies
    1. No need. Sahi.semester wise mark sheet enough

      Delete
    2. Consolidated is must.... Ungakitta illana Oru long size paper edunga.. 1st sem la irundhu 6th sem varaikum ulla all marks um subject wise ah mark sheet la ulla madri eludhunga.. Andha paper podhum.. Adha xerox eduthu attest vangikalam.. Last time consolidated illadhavangaluku idha dhan pannanunga..

      Delete
    3. Arun sankar sir... attest poda cv nadakum idathil oruvar irupara... avaridam vangi kollalama? Matrum oru doubt.... conduct certificate la date and s.no podala... nan oru maruthuvaridam vanginen conduct certificate cv il yevvaru payan padum..... siramam parkamal badil alikavum....

      Delete
  7. Certificates matum check panna solrangala appo epadi weightage poduvanga tet mark based job poda kudathu .. Onuma puriya matangathu pa.. Evalavu rakasiya posting poda vandiya karanam enna?

    ReplyDelete
    Replies
    1. aanaivarukum posting pottu amma pirathamar aaga mudivu pannitanga..pola..na ungaluku posting poduraen..nenga ellarum enaku vote ta podunga..and both la nenga than irupenga..konjam seathi podunga..posting potta tharalama ammava pirathamar aaka namum padupadalamae..

      Delete
    2. hai,sathya priya what is ur major... and ur old, new wtge

      Delete
    3. prathamar aaaaaaaaaaaaaaaaaa................
      prathamar na enna kadaila vikkira porula................! ingaye onnum kilika mudiyathava, antha side etti kuda parka mudiyathu

      Delete
  8. History candidate please collect your friends TET Marks and Waitage marks minimum 50 history [TET] Candidate then will be come out idea. 8438978585.

    ReplyDelete
    Replies
    1. Hi my old wtg 73new wtg 65.80 history

      Delete
    2. aa vu na history history history..innum ethae base senju weightage poda poranganae therila..

      Delete
    3. first weightage murai eppadinu parpom, apurama unga puthu weightagea sollunga, summa tension pannatheenga..ok

      Delete
  9. certificate not produced candidate , how can we go without call letter to verification center if any body knows any details please tell me iam confused

    ReplyDelete
  10. நன்றி நன்றி நன்றி .....



    trb ikku ......

    நன்றி நன்றி நன்றி.........


    நன்றி நன்றி நன்றி............. to THE LORD

    ReplyDelete
  11. முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம்: ஜூன் மாதத்திற்கு பிறகே நடவடிக்கை
    ‍‍‍‍-- தின மலர் நாளேடு

    முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர் கள், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை (டி.ஆர்.பி.,), நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர்.

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம், ஓராண்டாக இழுபறியில் இருந்து வருகிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்து விட்டது; இதர பாடங்களுக்கு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, தேர்வர்கள், கடந்த வாரம், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நேற்றும், பல மாவட்டங்களில் இருந்து வந்த, 100 பேர், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரை சந்தித்து பேசினர். அப்போது, ''சென்னை உயர்நீதிமன்றத்தில், பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தற்போது, உயர்நீதிமன்றத்திற்கு, கோடை விடுமுறை. ஜூன் மாதம் தான், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். வழக்கை விரைந்து முடித்து, இறுதி பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, விபு நய்யார் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து தேர்வர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ReplyDelete
  12. செமஸ்டர் வாரியான மார்க் பட்டியல் அவசியமா?
    ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி விளக்கம்
    --- தி இந்து நாளேடு

    ஆசிரியர் தகுதித்தேர்வில் பட்ட தாரி ஆசிரியர்கள் கூடுத லாக 24,650 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கி 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதில் பட்டப் படிப்புக்கான ஒட்டு மொத்த மதிப்பெண் சான்றிதழுடன் செமஸ்டர் வாரியான மதிப் பெண் சான்றிதழ்களும் கேட்கப் பட்டுள்ளன.
    இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது-
    தேர்வர்கள் 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு படித்துள்ளார்களா? என்பதை ஆய்வுசெய்வே செமஸ்டர் வாரியான மதிப்பெண் பட்டியல்களை சமர்ப்பிக்கச் சொல்லி யுள்ளோம். ஒருவேளை அவை இல்லாவிட்டால் அதுதொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு தேர்வர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமாக உறுதிமொழியும் எழுதிகொடுக்க வேண்டியதிருக்கலாம்.
    செமஸ்டர் வாரியாக மதிப் பெண் சான்றிதழ்களை சமர்ப் பிக்காத காரணத்திற்காக யாரும் நிராகரிக்கப்பட்டு விடமாட்டார் கள். அதேபோல், சாதி சான்றிதழில் பெயரில் சிறுசிறு எழுத்துப்பிழைகள் இருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் காரணமாக யாரும் நிராகரிக் கப்பட மாட்டார்கள்.
    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி