பிளஸ்–1 வகுப்புகள் ஜூன் 16–ந்தேதி திறக்கப்படுகின்றன: பள்ளிக்கல்வி இயக்குனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2014

பிளஸ்–1 வகுப்புகள் ஜூன் 16–ந்தேதி திறக்கப்படுகின்றன: பள்ளிக்கல்வி இயக்குனர்


தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன.

கோடை விடுமுறை

கோடை காலத்தையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை விடப்பட்டன. தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 200 தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 700 உயர்நிலைப்பள்ளிகளும், 6 ஆயிரம் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.இந்த பள்ளிக்கூடங்களில் 6 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

1 கோடியே 50 லட்சம் மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.இவர்களில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் 30–ந்தேதி வரை நடந்தது. அதன் பின்னர் கோடை விடுமுறை விடப்பட்டது. உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் 23–ந்தேதி முடிவடைந்து விடுமுறை விடப்பட்டன.பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படுகின்றன தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் கோடை விடுமுறை முடிந்து இன்று திறக்கப்படுகின்றன.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறுகையில் திட்டமிட்டபடி அனைத்து பள்ளிக்கூடங்களும் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன என்றும் பிளஸ்–1 வகுப்புகள் மட்டும் ஜூன்16–ந்தேதி திறக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

1 comment:

  1. போராட தயார் ஆகுங்கள். நமது எதிர்ப்பபை காட்டுவோம். அனைவரும் தலைமை செயலகம் செல்வோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி