இன்று வி.ஏ.ஓ., தேர்வு:10 லட்சம் பேர் பங்கேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2014

இன்று வி.ஏ.ஓ., தேர்வு:10 லட்சம் பேர் பங்கேற்பு.


தமிழகம் முழுவதும், வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வு, இன்று காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை நடக்கிறது. 10 லட்சம் பேர்,தேர்வு எழுதுகின்றனர்.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்), தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா கூறியிருப்பதாவது:வி.ஏ.ஓ., தேர்வை, 10 லட்சத்து, 8,662 பேர் எழுதுகின்றனர். 3,628 தேர்வு அறைகளில், தேர்வு நடக்கிறது. அனைத்து தேர்வு அறைகளிலும், வீடியோ கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வு அறைக்குள், மொபைல் போன், கால்குலேட்டர் உள்ளிட்ட, மின்னணு சாதனங்கள் எதையும் கொண்டு செல்லக்கூடாது. மீறுபவர்களை, அவர்களின் தேர்வு செல்லாதவை என அறிவிப்பதுடன், தொடர்ந்து தேர்வெழுத தடை விதிக்கப்படும்.இவ்வாறு, ஷோபனா தெரிவித்துள்ளார்.வருவாய்த் துறையில், 2,342 வி.ஏ.ஓ., பணிஇடங்களை நிரப்ப இந்த போட்டித் தேர்வு நடக்கிறது. 200 அப்ஜக்டிவ் டைப் கேள்வி களுக்கு, தலா, 1.5 மதிப்பெண் வீதம், 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

1 comment:

  1. CLUE TO FIND OUT WHEN TET POSTING!!!!! 1). When temporary B.T teachers (4000 rupees) are withdrawn.., we get the signal of immediate posting. 2). If govt extends them further, delay of posting. Govt extended temporary b.t teachers until June end..... We should wait and see whether govt withdraws the scheme or extends the scheme.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி