அரசு ஊழியர்கள் ஜூலை 11ல் போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2014

அரசு ஊழியர்கள் ஜூலை 11ல் போராட்டம்.


புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜூலை 11ம் தேதி அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை யில் பெற்றது.கூட்டத்தில், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். வருமான வரி உச்சவரம்பை ஸீ 5 லட்சமாக உயர்த்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, வெளி ஆதார பணியாளர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி ஜூலை 11ம் தேதி சென்னை, திருச்சி, கோவை, தர்மபுரி, கடலூர், தஞ்சை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி