1.37 லட்சம் மொழி பாட கட்டுரை நோட்டு: பள்ளி வாரியாக மாணவருக்கு வினியோகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2014

1.37 லட்சம் மொழி பாட கட்டுரை நோட்டு: பள்ளி வாரியாக மாணவருக்கு வினியோகம்.


ஆறு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி. மாணவருக்கான கட்டுரை நோட்டுகள், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவல புத்தக இருப்பு அறையில் இறக்கி வைக்கப்பட்டது.
சில நாட்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்க ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வித்திட்டம் அமலில் உள்ளதால், அதற்கான முதல் பருவ புத்தகம் உள்ளிட்ட பொருட்கள், பள்ளிகள் திறந்ததும் வழங்கப்பட்டது. ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஒரே புத்தகமாகவும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஒரே புத்தகமாகவும் வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்புக்கு, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஒரே புத்தகம், கணிதம் ஒரு புத்தகம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஒரே புத்தகமாக வழங்கப்பட்டது. இதுதவிர, நோட்டுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.தமிழ் வழி மாணவருக்கு வழங்கப்படுவது போல, ஆங்கிலவழி அரசுப் பள்ளியில் படிக்கும்மாணவருக்கும் நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. அதில், ஆறு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி. வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழி மொழிப் பாடங்களுக்கான கட்டுரை நோட்டு வழங்கும் பணி துவங்கி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஆறு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி. மாணவருக்கான ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 450 நோட்டுகள் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புத்தக இருப்பு அறையில் லாரிகள் மூலமாக 459 பெட்டிகளில் இறக்கி வைக்கப்பட்டது.ஒரு சில நாட்களில் மாணவர் மற்றும் பள்ளியின் பட்டியல் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவருக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாடத்திற்கான கட்டுரை நோட்டு வழங்கப்படும் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி