கல்வித்துறையில் ரூ.37 லட்சம் மோசடி: ஆர்.டி.ஐ. தகவல்களால் அம்பலம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2014

கல்வித்துறையில் ரூ.37 லட்சம் மோசடி: ஆர்.டி.ஐ. தகவல்களால் அம்பலம்.


நெல்லையில் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விழாவிற்காக 37 லட்சம் ரூபாயை மோசடி செய்து இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பரிசளிப்பு விழா

நெல்லையில் 2013 அக். 26ல் தமிழகம் முழுவதிலும் இருந்து பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற தனித்திறன் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது. இதில், அமைச்சர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சிக்கு, 3 லட்சம் ரூபாய் செலவிடலாம் என அரசு அறிக்கை அனுப்பி இருந்தது. இருப்பினும், உணவு, மேடை அலங்காரம், விழா மலர் தயாரித்தல், வரவேற்பு என பல பணிகள் தனியார் பள்ளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.மேலும், மாவட்டம் முழுவதும் தனியார், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களிடம் தலா ஐந்து ரூபாய் வீதம் 23 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகங்களிடம் நன்கொடை என்ற பெயரில் விளம்பரம் வெளியிட என வசூலித்துஉள்ளனர். இதே போல், 37 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். இதற்கான, எந்த வரவு, செலவு கணக்கும் முறையாக பராமரிக்கப்படவில்லை என, கூறப்படுகிறது.இதுகுறித்து, வழக்கறிஞர் பிரம்மா தகவல் பெறும் உரிமை சட்டத்தில் நான்கு மாதங்களாக சேகரித்த தகவல்களை நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு செலவிடஅனுமதித்த 3 லட்சம் ரூபாய்க்கு பதிலாக 37 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்காக, மாணவர்களிடம் இருந்து தலா ஐந்து ரூபாய் வசூலித்தது தவறு. இதுகுறித்து கேட்டால், தகவல் தராமல் புறக்கணிக்கின்றனர்.எனவே, மாவட்ட கல்வி அதிகாரிகள், 40க்கும் மேற்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

நிதி வசூலித்தோம்

மேலும், ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்களை கலெக்டர் கருணாகரனிடம் ஒப்படைத்து,நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். கலெக்டரும், விசாரணை நடத்தப்படும் என, தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு கூறுகையில், "3 லட்சம் ரூபாயில் நிகழ்ச்சி நடத்த முடியாது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம், நிதி வசூலித்தோம். மாணவர்களிடம் பணம் பெறவில்லை" என்றார்.

4 comments:

  1. July 1 week (vacancy estimate)
    July 2 week (rank list)
    July 3 week (correction in marks)
    July 4 week (rank list corrected)
    August 1 week (final list, counselling)
    August 2 week (C.M. bramanda medai)
    Appointment before 15 th

    ReplyDelete
  2. TN APPLY PANNA 15 DAYS TIME KODUGKARANGA, EXAM PREPAR PANNA 2 MONTHS TIME - BUT POSTING FINALISH PANNA ONE YEAR TIME - ENNA KODUMA SIR???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி