ஜூன் 16-ல் தொடக்கக் கல்வித் துறை கலந்தாய்வு தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2014

ஜூன் 16-ல் தொடக்கக் கல்வித் துறை கலந்தாய்வு தொடக்கம்.


நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாகையில் ஜூன் 16-ல் தொடங்கப்படுகிறது என மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் நிலஒளி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில், நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2014-15-ம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் மற்றும்பதவி உயர்வு கலந்தாய்வு நாகை, அண்ணாசிலை அருகே உள்ள புனித அந்தோனியார் உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஜூன் 16-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

ஜூன் 16-ம் தேதி காலை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் மாறுதல் கலந்தாய்வும், பிற்பகலில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உதவிதொடக்கக் கல்வி அலுவலராகப் பணிமாறுதல் கோருவதற்கான கலந்தாய்வும் நடைபெறும்.

ஜூன் 17-ம் தேதி காலை நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வும், பிற்பகலில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கோரும் கலந்தாய்வும் நடைபெறும்.

ஜூன் 18-ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வும், பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் மற்றும் பதவி உயர்வுகலந்தாய்வும் நடைபெறும்.

ஜூன் 19-ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் கோரும் கலந்தாய்வு நடைபெறும்.

ஜூன் 21-ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் கலந்தாய்வு நடைபெறும்.

ஜூன் 23-ம் தேதி காலை தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கோரும் கலந்தாய்வும், பிற்பகலில் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கோரும் கலந்தாய்வும் நடைபெறும்.

ஜூன் 24-ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வும்,

ஜூன் 25-ல் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் கோரும் கலந்தாய்வும் நடைபெறும்.

ஜூன் 26-ல் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் கோரும் கலந்தாய்வும்,

ஜூன் 28-ல் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் கலந்தாய்வும் நடைபெறும்.

இந்தக் கலந்தாய்வுகள் காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்விலும், தேர்ந்தோர் பட்டியல்படி பதவி உயர்வுக்குத் தகுதிப் பெற்ற ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கான கலந்தாய்விலும்பங்கேற்க வேண்டும். கலந்தாய்வு முடிவில் உரிய ஆணைகள் வழங்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. Go 71 க்கு எதிராகவும், 5% relax ரத்து சம்மந்தமான வழக்குகள் வரும் திங்களன்று அல்லது செவ்வாயன்று பல வழக்குகள் பதிவாக போகிறது. மேலும் இறுதி பட்டியல் வெளியிட தடை கோரப்படும்.. போல் தொரிகிறது. கல்விசெய்தி நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எழுதும் கமெண்ட் யார் மனதையும் பாதிக்காத வகையில் எழுதவும். நான் எழுது வது யாரையாவது பாதித்திருந்தால் மன்னித்து விடவும். எனக்கு தெரிந்த தகவலை நான் பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  2. Go 71 க்கு எதிராகவும், 5% relax ரத்து சம்மந்தமான வழக்குகள் வரும் திங்களன்று அல்லது செவ்வாயன்று பல வழக்குகள் பதிவாக போகிறது. மேலும் இறுதி பட்டியல் வெளியிட தடை கோரப்படும்.. போல் தொரிகிறது. கல்விசெய்தி நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எழுதும் கமெண்ட் யார் மனதையும் பாதிக்காத வகையில் எழுதவும். நான் எழுது வது யாரையாவது பாதித்திருந்தால் மன்னித்து விடவும். எனக்கு தெரிந்த தகவலை நான் பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  3. Appa june 29 apparam tan final list a? Very bad.,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி