வி.ஏ.ஓ., தேர்வில் 2.45 லட்சம் பேர் 'ஆப்சென்ட்!' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2014

வி.ஏ.ஓ., தேர்வில் 2.45 லட்சம் பேர் 'ஆப்சென்ட்!'


நேற்று நடந்த வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வில், 2.45 லட்சம் பேர், 'ஆப்சென்ட்' ஆயினர். தேர்வுக்கு, 10 லட்சம் பேர் பதிவு செய்தபோதும், 7.63 லட்சம் பேர் மட்டுமே, தேர்வை எழுதினர்.
வருவாய்த் துறையில், 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., நேற்று போட்டித் தேர்வை நடத்தியது. இதற்கு, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

நேற்று, 3,000த்திற்கும் மேற்பட்ட தேர்வு அறைகளில், தேர்வு நடந்தது. சென்னையில், தேர்வெழுதியவர்கள், தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். மாநில அளவில், எந்த பிரச்னையும் இல்லாமல், காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை, தேர்வு நடந்து முடிந்தது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா கூறியதாவது: தேர்வை, 7.63 லட்சம் பேர் எழுதினர். 2.45 லட்சம் பேர், தேர்வுக்கு வரவில்லை. 'கீஆன்சர்' ஒரு வாரத்திற்குள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவை,விரைந்து வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, ஷோபனா தெரிவித்தார்.

2 comments:

  1. 2016 il aavathu result poduvaangala.athargu payanthukittu thaan niraiya per exam ezhuthavaravillai.

    ReplyDelete
  2. I like in kalvimalar news very useful

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி