கவுன்சிலிங்'கில் எதிர்பார்த்தது 190; காட்டியது 12 மட்டுமே. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2014

கவுன்சிலிங்'கில் எதிர்பார்த்தது 190; காட்டியது 12 மட்டுமே.


மதுரையில், 190 காலி இடங்களை எதிர்பார்த்து பங்கேற்ற 'கவுன்சிலிங்'கில், 12 இடங்கள் மட்டும் காண்பிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு இளங்கோ மாநகராட்சி பள்ளியில்நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு, மையத்திற்கு 600 ஆசிரியர்கள் குவிந்தனர்.

மதியம் 1 மணிக்கு தான் 'ஆன்லைனில்' காலியிட விவரம் காண்பிக்கப்பட்டது.ஜூன் 26ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த பணிநிரவல் 'கவுன்சிலிங்'கில், 26 பேர் பங்கேற்றபோது, 2014-15 கல்வியாண்டிற்கு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 216 இடங்கள் காலியிடங்களாக காண்பிக்கப்பட்டன.இதனால், 26 ஆசிரியர்களும், வெளி மாவட்டங்களுக்கு செல்லாமல் உள்ளூரிலேயே பணி நியமனம் பெற்றனர். இந்நிலையில், நேற்று நடந்த பொதுமாறுதலிலும், அந்தகூடுதல் பணியிடங்கள் காண்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆனால், அப்பணியிடங்கள் காண்பிக்கப்படவில்லை.

மாறாக, ஆங்கிலம் 3, அறிவியல் 1, சமூக அறிவியலில் 8 இடங்கள் என மொத்தம் 12 காலியிடங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டன. தவிர சிறப்பாசிரியர் பிரிவில் ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் காட்டப்பட்டன.தமிழ், கணிதப் பாடங்களில் ஒரு இடமும் காட்டவில்லை. இதனால், முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமியிடம் ஆசிரியர்கள் முறையிட்டு மையத்தை விட்டுவெளியேறினர்.ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், "மாவட்டத்தில் தமிழ், கணிதம் தவிர்த்து பிற பாட ஆசிரியர் காலி பணியிடங்கள் காண்பிக்கப்பட்டு, 42 பேருக்குபணியிட மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன," என்றார்.ஆசிரியர்கள் கூறுகையில், "கூடுதல் பணியிடங்களுக்கு அங்கீகாரம் வழங்கி, ஆசிரியர்களை நியமிக்கும்போது இந்த 'கவுன்சிலிங்'கில் பங்கேற்று ஏமாந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் 'சிறப்பு கவுன்சிலிங்' நடத்த வேண்டும்," என்றனர்.

1 comment:

  1. ஆசிரியர் தகுதி தேர்வில் சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும்
    ஆசிரியர் தகுதி தேர்வில், சரியான விடை எழுதிய ஆசிரியருக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈஸ்வரி என்பவர்
    தாக்கல் செய்த வழக் கில் கூறியிருப்பதாவது:நான் கடந்த மே மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை எழுதினேன். அதில், 81 மதிப்பெண் பெற்றேன். தேர்வில், 33 வது கேள்விக்கு சரியான விடை எழுதிய எனக்கு மதிப்பெண் கொடுக்க தவறிவிட்டனர். இதுதவறானது. இதற்கு மதிப்பெண் தர நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.கடலினை மட்டுமே குறிக்காத சொல்லை தேர்வு செய் என்ற கேள்வி இருந்தது. இதற்கு விடை ஆழி, முந்நீர், பறவை, சமுத்திரம் என்று இருந்தது. இதில் சமுத்திரம் என்று நான் விடை எழுதினேன். அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம், ஆழி தான் சரியான விடை. சமுத்திரம் என்பதற்கு மதிப்பெண்ணை தர முடியாது என்று அறிவித்தனர்.


    சமுத்திரம் என்றால் கடல் என்கிற அர்த்தத்தை தவிர எண்ணையும் குறிக்கும். எனவே கடல் மட்டுமே குறிக்காத விடை, சமுத்திரம் தான் என்றும், இதற்கு மதிப்பெண் கொடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். ஒரு கல்லூரி ஆசிரியரை வைத்து விடை கேட்டார். இதற்கு கல்லூரி ஆசிரியர் கொடுத்த விடையும், மனுதாரர் எழுதிய விடையும் சரியாக இருந்தது. எனவே, வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் எழுதிய விடைக்கு மதிப்பெண் கொடுத்து, புதிய தேர்வு பட்டியலை தயார் செய்து வெளியிட வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி