பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு, குறித்த காலத்தில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த, அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு : பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், நாளையும், நாளை மறுநாளும் பதிவு செய்து கொள்ளலாம். 'தத்கல்' திட்டத்தில் தேர்வெழுத விரும்பும், தனித்தேர்வர்கள், தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். மார்ச்சில் எழுதிய தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ் நகலை, விண்ணப்பத்தை பதிவு செய்யும் அலுவலரிடம் காட்ட வேண்டும். தேர்வெழுத, ஒரு பாடத்திற்கு, 50 ரூபாயும், இதர கட்டணமாக, 35 ரூபாயும் செலுத்த வேண்டும். அத்துடன் கூடுதலாக, சிறப்பு அனுமதி கட்டணமாக, 1000 ரூபாய் மற்றும் பதிவு கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வுக் கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி