ஆராய்ச்சியாளர், விரிவுரையாளர்தகுதி தேர்வு: ஜூன் 22ல் நடக்கிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2014

ஆராய்ச்சியாளர், விரிவுரையாளர்தகுதி தேர்வு: ஜூன் 22ல் நடக்கிறது

காரைக்குடி;சி.எஸ்.ஐ.ஆர்., (அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி கழகம்) மற்றும் யு.ஜி.சி., இணைந்து நடத்தும், இளநிலை ஆராய்ச்சியாளர், விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு வரும் 22ம் தேதி, இந்தியா முழுவதும் உள்ள 26 மையங்களில் நடக்கிறது.
தமிழகத்தில் சென்னை, காரைக்குடி ஆகிய இரண்டு இடங்களில் நடக்கிறது.காரைக்குடியில் உமையாள் ராமனாதன் கல்லுாரி, அழகப்பா அரசு கலை கல்லுாரி, அழகப்பா மெட்ரிக்., மேல்நிலை பள்ளி, அழகப்பா பாலிடெக்னிக், சிக்ரி வளாகம், கேந்திரிய வித்யாலயா ஆகிய மையங்களில் நடக்கிறது. இதில் 6100 பேர் பங்கேற்கின்றனர்.

நுழைவு சீட்டு தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. போட்டோவுடன் கூடிய நுழைவு சீட்டை, www.csirhrdg.res.in என்ற இணையதளத்திலிருந்து, நேரடியாக பதவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவு சீட்டில், போட்டோ இல்லையெனில், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, போட்டோ அடையாள அட்டைக்கான, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, இவைகளில் ஏதேனும் ஒன்றை நுழைவு சீட்டோடு கொண்டு வர வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள், கருப்பு மை பால்பாயின்ட் பேனாவினால், மட்டுமே எழுத வேண்டும்.

22ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை, உயிர் அறிவியல், புவி, வானவியல், கடல் மற்றும் கோளவியல் அறிவியல், கணித அறிவியல் பாடத்திற்கான தேர்வும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை, வேதி அறிவியல், இயற்பியல் அறிவியல் மற்றும் பொறியியல் அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறும்.தேர்வு மையத்தில், நகல் நுழைவு சீட்டு வழங்கப்பட மாட்டாது. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள், 30 நிமிடத்திற்கு முன்னதாகவே வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு 04565 241 400, 241 521, 94438 50679, 94436 09776, என்ற எண்ணிலும், swamy23@rediffmail.com, npswamy@cecri.res.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

13 comments:

  1. சென்னை உயர்நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் நீதியரசர் எஸ். வைத்தியநாதன் அமர்வில் (நீதிமன்ற எண்: 15) இடம்பெற்றுள்ளன.

    ReplyDelete
    Replies
    1. MOOLAI MUDUKU ENGU IRRUNTHAALUM INDRU NADAKUM CV ku

      KALANDHUKAATHAVANGA vathu kalanthukonga. inth CV INDREA KADAISI

      MARAVAATHIR VARUNGAALA AASIRIYAR PERUMAKALEA.

      Delete
  2. WRIT PETITIONS RELATING TO
    TEACHERS RECRUITMENT BOARD CHALLENGING KEY ANSWERS

    62. WP.28640/2013
    63. WP.28647/2013
    64. WP.28893/2013
    65. WP.28902/2013(Botany)
    66. WP.29346/2013
    TO
    WP.29349/2013 (Physics)

    67. WP.29464/2013
    68. WP.29539/2013
    69. WP.29555/2013
    70. WP.29605/2013
    71. WP.29987/2013
    72. WP.30006/2013
    73. WP.30616/2013
    TO
    WP.30618/2013
    74. WP.30927/2013
    75. WP.31294/2013
    76. WP.31352/2013
    77. WP.31590/2013
    78. WP.31674/2013
    79. WP.31755/2013
    80. WP.31769/2013
    81. WP.31868/2013
    TO
    WP.31872/2013(Commerce)
    .....etc

    ReplyDelete
    Replies
    1. madam indraikavathu case move aguma

      Delete
    2. வழக்குகள் முடிந்தால் இன்று இரவே தேர்வு வாரியம் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டுவிடும்.

      Delete
  3. Some body told writ filed against new G.O...

    ReplyDelete
  4. Thamathamaga kidaikum neethiuum Pg ku aneethi than

    ReplyDelete
  5. Thank you for your information bharathi sir

    ReplyDelete
  6. Thank you for your information bharathi sir

    ReplyDelete
    Replies
    1. Pgக்கு வைத்தியநாதன் வைத்தியம் பார்த்து ஆபரேசன் சக்சஸ் பேசண்ட் குளோஸ்.

      Delete
    2. IVVALAVU RANAKALATHILUM ORU KUTHOOKALAM..... SUPER PAVI SUPER

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி