வி.ஏ.ஓ., தேர்வு தேதியில் குளறுபடி டி.என்.பி.எஸ்.சி., மெத்தனம் - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2014

வி.ஏ.ஓ., தேர்வு தேதியில் குளறுபடி டி.என்.பி.எஸ்.சி., மெத்தனம் - தினமலர்

'பத்து லட்சம் தேர்வர்கள் பங்கேற்கும், வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வு, நாளை, 14ம் தேதி நடக்கும்' என, ஏற்கனவே, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவித்த நிலையில், தேர்வாணைய இணைய தளத்தில், '15ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, வி.ஏ.ஓ., தேர்வு நடக்கும்' என, அறிவிக்கப் பட்டு உள்ளது.


வருவாய்த்துறையில், 2,342 வி.ஏ.ஓ., பணிஇடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, மார்ச், 17ல், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. மார்ச், 17ம் தேதியில் இருந்து, ஏப்ரல், 15ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.பத்தாம் வகுப்பு நிலையில் நடக்கும் தேர்வு என்பதால், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். நாளை, 14ம் தேதி, காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை, தேர்வு நடக்கும் என, ஏற்கனவே, தேர்வாணையம் அறிவித்து உள்ளது.தகுதியான தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in), சமீபத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதும், 400க்கும் அதிகமான மையங்களில், தேர்வு நடைபெற உள்ளது.குறிப்பிட்ட சில மையங்களில், தேர்வு துவங்குவது முதல், முடியும் வரை, வீடியோ கண்காணிப்பு செய்யவும், தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது.


இந்நிலையில், தேர்வாணையத்தின் இணைய தளத்தில், 'வி.ஏ.ஓ., தேர்வு, ஜூன், 15ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 2014 - 15ம் ஆண்டு, தேர்வு அட்டவணை பகுதியில், வரிசை எண், 11ல் வெளியிடப்பட்ட வி.ஏ.ஓ., தேர்வு அறிவிப்பில், '15ம் தேதி' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், தேர்வாணைய இணையதளத்தின் மற்றொரு பக்கத்தில், '14ம் தேதி தேர்வு' என, அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், தேர்வு, 14ம் தேதியா அல்லது 15ம் தேதியா என, தெரியாமல், தேர்வர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.இதுகுறித்து, தேர்வாணைய வட்டாரம் கூறுகையில்,'14ம் தேதி காலை தான் தேர்வு நடக்கிறது. இதில், எந்த மாற்றமும் இல்லை. 15ம் தேதி என்று, எப்படி வந்தது என தெரியவில்லை' என்றது.- நமது நிருபர்

7 comments:

  1. Mani sir
    Indrodu absentee cv mudiyudhe adha pattri thagaval edhum therindhadha. Ethana per kalandhukittanga. Go ms 71 ku against a case potrukangala. Adhanala namakku edhum badhippu irukka. Sollunga sir

    ReplyDelete
    Replies
    1. ITHUVARAIL CV il kalandhukathavanga THAYAVUSEITHU indraikavathu vanthu

      kalanthukonga Plz. Marupadium TRB YETHAVATHU athiradi arivipu koduthu

      veetuku vanthu CV pandraa maathiri nadanthukaathinga. moolai muduku enga

      iruthalum vanthudunga. MARAVAATHIR INTHA CV INDRAE KADAISI.

      Delete
  2. TNTET work, JULY 1 muthal soodu pidikum.

    ReplyDelete
  3. Namakku adhanal posting badhikadhe vijay sir

    ReplyDelete
  4. vijay Kumar sir Assembly nadakum podu tet posting poduvankala

    ReplyDelete
  5. vijaykumar romba case file agiducha...
    today entha fresh dream varuliyyaaa

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி