மதுரையை சேர்ந்த ரமேஷ் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
கல்விபெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், ஏழை மக்களின் குழந்தைகளுக்கு துவக்க நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். ஆனால், சில தனியார் பள்ளிகள் முறையாக பின்பற்றுவதில்லை.மாறாக பள்ளியில் ஒரு ஓரத்தில் உட்கார வைக்கின்றனர். மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு நடத்துவதைப் போல,இதிலும் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை சேர்க்க வேண்டும். 25% இடஒதுக்கீடு வழங்காத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
கலந்தாய்வு மூலம் மாணவர்களை சேர்க்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி