மாத சம்பளக்காரர்களுக்கு இனிப்பு செய்தி; வருமான வரி உச்சவரம்பு ரூ 3 லட்சமாக உயர்கிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2014

மாத சம்பளக்காரர்களுக்கு இனிப்பு செய்தி; வருமான வரி உச்சவரம்பு ரூ 3 லட்சமாக உயர்கிறது!


வருமான வரி விலக்கு பெறுவதற்கான வரம்பை தற்போதுள்ள ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால், மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதியஅரசு அமைந்துள்ளது. இந்த அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் 11ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆலோசனை நடத்தி வருகிறார். முதல் பட்ஜெட் என்பதால், மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பாக அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் சம்பளதாரர்கள் வருமான வரி விலக்கு பெறுவதற்கான வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கின்றனர்.தற்போது, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக உள்ளவர்களிடம் வருமான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரையான வருமானத்திற்கு 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களிடம் 30 சதவீதம் வரியும் வசூலிக்கப்படுகிறது.

வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த2010ம் ஆண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், இதனை அப்போதைய மத்திய அரசு ஏற்கவில்லை. இந்நிலையில், மத்தியில் அமைந்துள்ள புதிய பாஜ அரசு, முதல் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த முடிவு செய்திருப்பதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்துவதால் அதிகம் பலன் அடைய போவது மாத சம்பளம் பெறுபவர்கள்தான். இதனால், இவர்களின் பொருட்கள் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும் என்பதால், வருமான வரி விலக்கை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதே போல் வீட்டுக்கடன், மெடிக்கல் இன்சூரன்ஸ் போன்றவற்றிற்கு அளிக்கப்படும் வருமானவரி சலுகைகளையும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், நேரடி வரி விதிப்புவரைவுச் சட்டத்தில், ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு அதிகமாக வருமானம் கொண்ட பெரும் பணக்காரர்களுக்கு 35 சதவீத வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதையும் நிதியமைச்சகம் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

28 comments:

  1. Good news for all well come modiji. இந்ந நாடும் நாட்டு மக்களும் உங்களிடம் நிறைய எதிர்பார்த்து காத்திருக்கிறது.

    ReplyDelete
  2. Go 71 க்கு எதிராகவும், 5% relax ரத்து சம்மந்தமான வழக்குகள் வரும் திங்களன்று அல்லது செவ்வாயன்று பல வழக்குகள் பதிவாக போகிறது. மேலும் இறுதி பட்டியல் வெளியிட தடை கோரப்படும்.. போல் தொரிகிறது. கல்விசெய்தி நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எழுதும் கமெண்ட் யார் மனதையும் பாதிக்காத வகையில் எழுதவும். நான் எழுது வது யாரையாவது பாதித்திருந்தால் மன்னித்து விடவும். எனக்கு தெரிந்த தகவலை நான் பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே வழக்கு விசாரணைக்கு எப்போது வருகிறது...

      Delete
    2. Sri அவர் கூறுவது உண்மையா

      Delete
    3. யார் வழக்கு போடூகிறார்களோ அவர்கள் மீது இனிமேல் வழக்கு போடவேண்டும்.இதனால் எவ்வளவோ பேர் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது பொருளாதாரம் பாதிப்பு பலப்பேர் எந்த வேலைக்கும் செல்லமுடியாமல் தவிக்கிறார்கள் பொதுவாக பார்த்தால் பல கோடி ருபாய் வருவாய் இழுப்பு தயவு செய்து யாரும் வழக்கு போட்டு அடுத்தவரின் வாழ்வில் விளையாடாதீர்கள்.

      Delete
    4. green park neengal 82-89 nnu ninaikiren.

      Delete
  3. தயவுசெய்து யாரும் வழக்குபோடதீர்கள் அடுத்தவர்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்

    ReplyDelete
    Replies
    1. விளையாடுவதற்கு இன்னும் என்ன இருக்கிறது? ஏற்கனவே சில வழக்குகள் பதிவாகிவிட்டன.

      ஆனால் எத்தனை வழக்குத் தொடர்ந்தாலும் அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு நீதிபதி stay order வழங்கமாட்டார் என நினைக்கிறேன்.

      Delete
    2. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.பள்ளி மாணவர்களின் நலன் கருதி stay வழங்கப்படமாட்டாது.எந்த ஒரு ஜிஒ கொன்டுவந்தாலும் யாருக்காவது பாதிப்பு இருக்கதான் செய்யும்.இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

      Delete
    3. Case poduvathu matravargalin life ha kedukka illai. Thannai kappatri kolla......

      Delete
    4. Priyavathana case podavillai endral, good weightage system vanthirukkathu. Evlo case pottalum ellam nam nanmaike!!!!!!

      Delete
    5. Govt should have thought twice to create G.O...... from all angles....

      Delete
    6. PRIYAVATHANA is the great milestone in the history of TNTET

      Delete
  4. Stay order வழங்கும் முன் மற்றவர்களின் நிலையும் கருத்தில் கொள்ளவேண்டும் இது பெரும்பான்மை யானவரின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.

    ReplyDelete
  5. Illai mani sir....inimel edhavadhu thadai endral....ore nerathil pass ana anaivarum poison saapidum porattam nadathavendiyadhudhan.

    ReplyDelete
  6. கோர்ட்டும் நீதி என்ற போர்வையில் பல பொது நடவடிக்கையில் தடைஏற்ப்படுத்துகிறது

    ReplyDelete
  7. RTI REPORT FOR PAPER 1 SG
    1.TET MARK 90 AND ABOVE MARK CANDIDATE = 12596
    2.TET MARK 100 AND ABOVE MARK CANDIDATE = 2761
    3.TET MARK 90 AND ABOVE MARK SC CANDIDATE = 1933 {M=639, F=1294}


    RTI REPORT FOR PAPER 2 ENGLISH
    1. TET MARK 90 AND ABOVE MARK CANDIDATE = 5330
    2. TET 82 TO 89 MARK CANDIDATE = 5386
    3. TET MARK 82 AND ABOVE MARK TOTAL CANDIDATE = 10716
    4. TET MARK 82 AND ABOVE MARK SC CANDIDATE = 1811
    5. TET MARK 82 AND ABOVE MARK SCA CANDIDATE = 246
    6. TET MARK 82 AND ABOVE MARK MBC CANDIDATE = 3359
    7. SO BC+BCM+OC+ST = 5300

    ReplyDelete
    Replies
    1. tamil major above 90 how many canditate male and female how many ? mbc how many ?

      Delete
  8. rti letter irunthal kalviseithiku publish panunga

    ReplyDelete
  9. ஏழைமாணவர்களின் ஏழைஆசிரியர்களின் வாழ்வில் விளையாடுவதே அனைவரின் பொழுதுபோக்காக உள்ளது.

    ReplyDelete
  10. ஆங்கிலம் எடுக்க ஆசிரியர்கள் இல்லாமல் அரசுப்பள்ளி அவதி

    ReplyDelete
  11. அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி ஆரம்பித்தல் வேண்டும் தானகவே தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் குறையும்ஒருசிலபள்ளிகளைத்தவிர அனைத்து தனியார்பள்ளியும் ஆங்கிலம் வழியை தமிழில் தான் போதிக்கின்றன

    ReplyDelete
  12. Green sir 20th final list varum entru soningal varuma nampapalama

    ReplyDelete
  13. When will be the final list and the appointment order? Please publish the right news. Don't spread rumour.

    ReplyDelete
  14. piriyavathana tha ella pirachanikum karanam

    ReplyDelete
  15. 90 eduthavanga 42 weitage 104 eduthavangalum 42 weitage enna niyayam sir. So priyavadhana madem ku thanks..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி