தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு-பள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடி வைக்க நடவடிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2014

தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு-பள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடி வைக்க நடவடிக்கை.


பள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடிவைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் எல்லாவகையான மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். என்று பள்ளி கல்வி இயக்குநர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரின் உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது மாவட்டங்களில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மழையினால் பள்ளி மாணவ மாணவியருக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் மாணவ மாணவியர், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.பள்ளி வளாகத்தில் நீர்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால் அவற்றை மூடி வைக்க வேண்டும். பள்ளிகளுக்கு வெளியே உள்ள நீர்நிலைகளுக்கு மாணவ மாணவியர்பாதுகாப்பு இன்றி செல்லக்கூடாது.

பள்ளி வளாகத்தில் உள்ள மின்சாதனங்களை மாணவர்களை கொண்டு இயக்குவதை தவிர்க்க வேண்டும். பள்ளி நேரம் முடிந்த பின்னர் வகுப்பறையை விட்டு அனைத்து மாணவர்களும் சென்றுவிட்டதை உறுதி செய்த பின்னர் வகுப்பறை மற்றும் பள்ளியை பூட்டிவிட்டு செல்ல வேண்டும். பள்ளிகளில் முதலுதவி செய்யும் வகையில் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள அனைத்து மருத்துவ பொருட்கள் அடங்கிய முதலுதவி பெட்டி இருத்தல் வேண்டும். தீயணைப்பு சாதனங்கள் பள்ளியில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி