அனைத்துப் பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஜூன் 30-க்குள் ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.அதன் விவரம்: மழைநீர் சேகரிப்பு கட்டுமானம் இல்லாத அனைத்து அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் கட்டுமானப் பணியை முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏற்கெனவே மழை நீர் சேகரிப்பு கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள மழை நீர் சேகரிப்பு கட்டுமானங்களை பொதுப்பணித்துறை மூலம் சீரமைக்க வேண்டும்.
மாணவர்களை ஒருங்கிணைத்து மிகப் பெரிய அளவில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஊர்வலங்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளி வளாகத்தினுள் மழை நீர் சேகரிப்பு தொடர்பாக சுவர் விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும்.மழை நீர் சேகரிப்பு தொடர்பான உறுதி மொழியை பள்ளிகளில் தினசரி நடைபெறும் இறைவணக்கக் கூட்டத்தில் எடுக்க வேண்டும். மழை நீர் சேகரிப்பில் சிறந்த பள்ளிக்கு விருது வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி