வி.ஏ.ஓ. தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு: 384 விண்ணப்பங்கள் நிராகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2014

வி.ஏ.ஓ. தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு: 384 விண்ணப்பங்கள் நிராகரிப்பு.


வரும் 14ம் தேதி நடக்கஉள்ள வி.ஏ.ஓ. (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி. (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.
வருவாய்த் துறையில் காலியாக உள்ள 2,342 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்ப வரும்14ம் தேதி போட்டித் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிறது. இதற்கு 10 லட்சம் லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததில் தகுதியில்லாத 384 பேரின் விண்ணப்பங்களை தேர்வாணையம் நிராகரித்தது. தேர்வு தேதி நெருங்கியதை அடுத்து தகுதியான தேர்வர்களுக்கு தேர்வாணைய இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: தேர்வர்கள் www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்ப பதிவு எண்ணைபதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், தங்களின் பெயர் நிராகரிக்கப்பட்டவர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். இந்த பட்டியலிலும் பெயர் இல்லை எனில் தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது உள்ளிட்ட விவரங்களுடன் வரும் 9ம் தேதிக்குள்contacttnpsc@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி