தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் படிப்பில் சேருவதற்கான ஆர்வம் மாணவ, மாணவிகள் இடையே அதிகரித்து வருகிறது.
இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு அதிக வரவேற்பு இல்லாததால் பெரும்பாலான தனியார் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் அரசு பணி கட்டாயம் கிடைக்கும் என்பதால் ஏற்கனவே பி.எட் படித்தவர்கள் ஆசிரியர்தகுதித் தேர்வு எழுதி வருகிறார்கள்.மேலும், பிளஸ் 2 முடித்தவர்களும், பி.ஏ., பி.எஸ்.சி., பட்டபடிப்புகளில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள். பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஒரு வருடம் பயிற்சியை முடித்தால்தான் தகுதித் தேர்வு எழுதமுடியும். எனவே, கடந்த 5 வருடங்களாக பி.எட் கல்லூரிகள் அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் தற்போது 657 பி.எட் கல்லூரிகள் உள்ளன. இதில் 21 கல்லூரிகள்அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளாகும்.மேலும் இந்த வருடத்துக்கு 65 ஆயிரம் மாணவ, மாணவிகள் பி.எட் படிப்பை முடிக்கிறார்கள். இந்த வருடம் மேலும் 40 புதிய பி.எட் கல்லூரிகள் வர இருப்பதாக தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:–40 புதிய கல்லூரிகள் தொடங்க டெல்லியில் உள்ள என்.சி.டி.இ அங்கீகாரம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்தில் இணைப்பு அனுமதி பெற்றால்தான் கல்லூரியை தொடங்க முடியும். அதற்கு 10 சான்றிதழ் அவசியம். சுற்றுச் சூழல் சான்று, கட்டிடத்தின் உறுதித் தன்மை, டி.டி.பி., அப்ரூவல் உள்ளிட்ட இந்த சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். முறையாக விண்ணப்பத்தால் அனுமதி வழங்கப்படும்.இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவது குறித்து அரசிடம் இருந்து விரைவில் அறிவிக்கை வரும். அவை வந்தவுடன் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கும்.பி.எட் 2 வருட படிப்பு இந்த ஆண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை. அடுத்த ஆண்டு (2015–16) தான் இந்த புதிய முறை தொடங்கும். இதற்காக என்.சி.டி.ஏ, பொதுமக்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Court method GO வந்தால் மூத்த ஆசிரீயர் அனைவருக்கும் பாதிப்பு வரும். TET மதிப்பெண் வைத்து பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால் +2, UG, BED MARK உள்ளே வருவதால் தான் பிரச்சனை. இவற்றில் யார் எவ்வளவு மதிபெண் பெற்றிருந்தாலும் பிரச்சனை கிடையாது, ் 50% மேல் பெற்றாலே அது University யால் அங்கிகரிகப்பட்ட Degree ஆகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றே.
ReplyDeleteஆனால் வேறுபாடு என்பது படித்து முடித்த காலங்கள். நேற்று முடித்ததும் பத்து வருடங்களுக்கு முன்னால் முடித்தவர்களும் ஒன்று என்று கூற முடியுமா. இதற்கு சரியான தீர்வு புதிய Go ல் இல்லை என்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்க Case போடுவோம்.
TET ல் அதிக மதிப்பெண் பெற்ற மூத்த ஆசிரியர்களே நமது வாய்ப்பு வேரொருவரால் பரிபோகிறது. விழித்துகொள்ளுங்கள்.
நமக்கு பாதிப்பு என்ற நிலையில் தான் பழைய Weightage முறைக்கு எதிராக நான் Case file செய்து வெற்றி பெற்றேன். Go ரத்து என்பது அனைவருக்கும் பொதுவாக அமைந்தது. ஆனால் இனிமேல் நாம் Case file செய்தால் அது அவரவர்களுக்கு தான் சாதகம் பொதுவாக அமையாது.
ஒ
புதிய கல்லூரிகள் ரேகுலர் கல்லூரியா? இர் ரேகுலர் கல்லூரியா? இதை ஆய்வு செய்யுங்கள் சார் முதலில்
ReplyDeletepass pannunavanukke velai ella enimel padichchu.......
ReplyDeleteமேற்கண்ட Go. வெளிவரும் பட்சத்தில் கேஸ் போடுவது உறுதி. ஏனென்றால் ஒரு Go வெளியிடும் போது எவர் ஒருவருக்கும் சாதக பாதகமாக அமையகூடாது. சாதகம் அடைவோர் இந்த Go தான் சரி என்று கூறுவர். அது அவர்கள் சுயநலம். ஆனால் பாதகம் அடைந்தோர் கேஸ் போட வேண்டிய சூல்நிலைக்கு ஆளாகிறார்கள்.
ReplyDeleteபாதிக்கப்பட்டவர்கள் மூத்த ஆசிரியர்கள் மொபைல் நொம்பரை எனக்கு மெயில் பன்னவும்.
rlakthika@gmail.com