ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கு 500 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை: தலைமையாசிரியர் சொந்த செலவில் வழங்கினார்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2014

ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கு 500 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை: தலைமையாசிரியர் சொந்த செலவில் வழங்கினார்!


கண்டமங்கலம் ஒன்றியம் சின்னபாபுசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
ஊராட்சி தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை மற்றும் குறிப்பேடுகளை வழங்கி மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் கவுரிபாலக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

இப்பள்ளியில் 2014-2015ம் கல்வியாண்டிற்கான (ஆங்கில வழிக்கல்வி) முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.தனியார் பள்ளிகளில் இருந்து முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பில் சேர்ந்த 20 மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் தனது சொந்த செலவில் கல்வி ஊக்கத்தொகையாக தலா 500 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.ஊராட்சி துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள் அருள், ராஜவள்ளிமற்றும் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். பள்ளியின் பட்டதாரி ஆசிரியை ஜெயந்திடெய்சி நன்றி கூறினார்.

2 comments:

  1. இன்னும் ஆங்கில வழி பாட புத்தகமே பல பள்ளிகளுக்கு வர வில்லை

    ReplyDelete
  2. very good sir.congratulation.keep it up.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி