கண்ணதாசனின் 88 வது பிறந்த நாள்- சில நினைவுக் குறிப்புகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2014

கண்ணதாசனின் 88 வது பிறந்த நாள்- சில நினைவுக் குறிப்புகள்

"எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்துவிட்டேன்.ஆகவே இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்கிற யோக்கியதை எனக்கு உண்டு"
20 நூற்றாண்டில் பாரதிக்குப் பிறகு அதிக புகழ்ப் பெற்ற கவிஞர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதத் தொடங்கும் முன் கொடுத்திருக்கும் தன்னிலை விளக்கம் இது.


செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.

இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.

""படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது.

நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.

அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.

கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு ஷூட்டிங்.

ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.

ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.

வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.

""இந்தக் கார்களை கவனித்தீர்களா..?

இவை எல்லாமே நம்முடைய கார்கள்.

வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது.

இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன்.

நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்!

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.

அவமானம் ஒரு மூலதனம்...

இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!

("வெற்றி நிச்சயம்' என்ற புத்தகத்தில் "அவமானம் ஒரு மூலதனம்' என்ற கட்டுரையில் சுகி.சிவம்..)
 
முத்தையா-
உன்வரி ஒவ்வொன்றும் முத்தையா
சொத்தையா-
உன்பாடல் கோடம்பாக்க சொத்தையா.

இலக்கியத்தை
இலகுவாக கையாண்ட உன்திறமை
யாருக்கிங்கே வரும்.
வார்த்தைகளைத் தேடிப்பிடித்து
நீ வார்த்த கவியெல்லாம்
ஒரு கோடி பொன்னுக்கு மதிப்பு பெறும் .

உன்வரிகளிலே வள்ளுவன் இருந்தான்
உன்கவிகளிலே கம்பன் சிரித்தான்
கேட்டு ரசித்த பாமரனோ
உணவு மறந்தான் .

கீதை சொன்னாய் -அதையும்
கீர்த்தியாய் சொன்னாய்
வேதம் சொன்னாய் -பலரும்
விளங்கச் சொன்னாய் .

மதுசுகத்தில் தவழ்ந்தாலும்
மன்னவா நீ ஒரு கவிதைச்செண்டு
மனம் கவர் உன்கவி கேட்டு
நாங்களெல்லாம் மலர் சுற்றும்வண்டு.

கண்மூடித் திறப்பதற்குள்
கண்ணதாசனே எங்கு போனாய்
தமிழைத் தவிக்கவிட்டு
தனிமரமாய் ஏன் போனாய்.

கவிதைகளின் கர்த்தாவே
மறுபடியும் நீ பிறக்க வேண்டும்
பாழ்பட்டு கிடக்கும் பாட்டுலகம்
உன்பாட்டாலே சிறக்க வேண்டும்.

8 comments:

  1. தகவலுக்கு நன்றி மணியரசன் அவர்களே. உங்களது சேவை தொடர்ந்து எமக்கு கிடைக்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. நல்ல தகவல் நண்பரே.. அத்துடன் இன்னொரு தகவலும் சேர்த்துக்கொள்ளுங்கள்

    இன்று தமிழக இசை உலகில் ஜாம்பவான்களான கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன்ஆகிய இருவரின் பிறந்த தினமும் இன்று தான் ...

    ReplyDelete
  3. While reading all above lines, just lightning waves spreads in walls of heart....

    ReplyDelete
  4. Manic sir....
    arumai ....solla varthai halle illai ...
    Thamil kavigarkalai patriya thanii pathipuhalai velividavum ....

    ReplyDelete
  5. நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    தமிழ் கவிஞர்களிலேயே கண்ணதாசன் தனிப்பட்டவர்.அதிக துன்பங்களையும், அதிக இன்பங்களையும் ஒரு சேர அனுபவித்தவர்.இவரது தாக்கம் எனக்கு மிக அதிகமுண்டு.

    முடிந்தால் கண்ணதாசன் நூல்களையும்,அவரது வாழ்க்கை வரலாற்றையும் சுவை பட எழுத முயல்கிறேன்.நான் என்ன சுவை பட எழுதுவது அவரைப் பற்றி யார் எதை எழுதினாலும் சுவை மிக்கதாய் அமைந்து விடும்.

    ReplyDelete
  6. Yes ,mani sir..
    avarathu noolgalai aarainthu nanmai petravargal yeralam ...
    Arthamulla inthumathathil 3 paguthigale yenathu arivukku yettiyathu ...
    Atharkku male avarathu illakiya nadai matrum avarathu anuabavam anaithum avarukku mattume vellicham ...
    Athe pol kalgi yin uraigalum ....
    Tamile ...inimai ...tamil kavigargalal innum inimai ....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி