ஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2014

ஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு.


உதவி துவக்கக் கல்வி அலுவலர்களின் (ஏ.இ.ஓ.,) சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடியைச் சேர்ந்த ஜேம்ஸ், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
ஏ.இ.ஓ.,வாக பணியாற்றிய நான், 2010 ஜனவரியில் ஓய்வு பெற்றேன். அலுவலகத்தில் மேற்பாற்வையாளர், என்னைவிட கூடுதல் சம்பளம் பெற்றார். அவருக்கு இணையாக சம்பளம் கேட்டு அரசுக்கு பலமுறை மனு அனுப்பினேன். 2011 ஜனவரியில் ஒருநபர் குழு பரிந்துரைப்படி, ஆசிரியர்கள், மாவட்டகல்வி அலுவலர்கள் ஊதியம் மறுநிர்ணயம் செய்தபோது, எங்களுக்கு செய்யப்படவில்லை.ஏ.இ.ஓ., பதவி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையானது என்பது உண்மை இல்லை. எங்களுக்கு மேல் பணியிடம் கிடையாது. எனவே ஏ.இ.ஓ.,க்களுக்கு தனி சம்பள விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.நீதிபதி மகாதேவன் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது.அவரது உத்தரவு:மேற்பார்வையாளர் சம்பளம் ஐகோர்ட் உத்தரவுப்படி நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. 'நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஏ.இ.ஓ.,க்களுக்கு கூடுதல் சம்பளம் நிர்ணயிப்பதால், கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு சிறப்பு நிலைப் பணி. இதற்கு பதவி உயர்வு கிடையாது.

தமிழக அரசு 2011 அக்டோபரில் பிறப்பித்த உத்தரவில், 'ஏ.இ.ஓ., பணி நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு இணையானது இல்லை' என தெரிவித்துள்ளது. எனவே அவர்களுக்கு தனியாக சம்பளம் நிர்ணயம் செய்து இருக்க வேண்டும். தேர்வு நிலை பணிக்கானநோக்கத்தை தொழில்நுட்ப காரணம் கூறி மறுக்கக் கூடாது. எனவே அரசு உத்தரவு சட்ட விரோதமானது. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் சம்பள நிர்ணயம் தொடர்பான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏ.இ.ஓ.,க்களுக்கு தனி சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி