அங்கன்வாடி மையங்களுக்கு 'சுகாதார பை' வினியோகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2014

அங்கன்வாடி மையங்களுக்கு 'சுகாதார பை' வினியோகம்.


தமிழகத்தில், 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு, குழந்தைகளின் சுகாதாரம் பேண, 2.72 கோடி ரூபாய் செலவில், சுகாதாரப் பை வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இம்மையங்களில், பிறந்த குழந்தைகள் முதல், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, இணை உணவு, முன்பருவக் கல்வி, மருத்துவ சேவை போன்றவை அளிக்கப்படுகின்றன. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவதுடன், அவர்களின் மனம், உடல் மற்றும் சமூக ரீதியான வளர்ச்சிக்கு, அடித்தளம் அமைக்கப்படுகிறது.

குழந்தைகளை சுத்தமாகப் பேணி, சுகாதார நிலையை மேம்படுத்த, அங்கன்வாடி மையங்களுக்கு, 2.72 கோடி ரூபாயில்,சுகாதாரப் பை வழங்கப்படும் என, கடந்த பட்ஜெட், மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மையங்களுக்கு சுகாதாரப் பை வழங்கப்பட்டுள்ளது. இப்பையில், ஆறு துண்டு, இரண்டு நகம் வெட்டும் கருவி, மூன்று சீப்பு, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி, 12 ஆயுர்வேத சோப் ஆகியவை உள்ளன. இப்பையின் மதிப்பு, 500 ரூபாய். இப்பையில் உள்ள பொருட்களை பயன்படுத்தி, அங்கன்வாடி மையங்களுக்கு வரும், 11 லட்சம் குழந்தைகளுக்கு, கையை சுத்தமாக கழுவ, கற்றுக்கொடுக்க வேண்டும். கை விரல் மற்றும் கால் விரல்களில் உள்ள நகங்களை வெட்டி பராமரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி