டியூஷனுக்கு வருமாறு மாணவர்களிடம் நிர்பந்தம்! முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அடாவடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2014

டியூஷனுக்கு வருமாறு மாணவர்களிடம் நிர்பந்தம்! முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அடாவடி.


அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களை கட்டாயம் டியூஷனுக்கு வர வேண்டும் என நிர்பந்தித்து வருவதால் ஏழை பெற்றோர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணே அந்த மாணவனின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்பதால், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக செலவை பற்றி கவலைப்படாமல் தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர்.

மேலும், ஒவ்வொரு பாடத்திற்கும் தனியாக டியூஷனுக்கும் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். இதுபோன்ற மாணவர்களுக்காக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வணிகவியல், கணக்கியல் பாடங்கள் நடத்தும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டாக சேர்ந்து நகரப் பகுதிகளில் "டியூஷன் சென்டர்' நடத்தி வருகின்றனர்.

தனியார் பள்ளி நிர்வாகங்கள் பல, பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக பிளஸ் 1 மாணவர்களுக்கு நேரடியாகவே பிளஸ் 2 பாடங்களை நடத்த துவங்கி விடுகின்றனர்.கோடை விடுமுறையில் ஒவ்வொரு பாடத்திற்கும் சிறந்த (அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும்) ஆசிரியர்களை அழைத்து வந்து பாடம் நடத்தி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகங்களும், பிளஸ் 2 பொதுத் தேர்விற்கு முதல் ஆண்டே மாணவர்களுக்கு பாடம் நடத்த துவங்கியுள்ளனர்.இந்த பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வணிகவியல், கணக்கியல்) ஆசிரியர்கள், மாணவர்களை கட்டாயமாக தன்னிடம் டியூஷன் படிக்க வேண்டும்.

ஒவ்வொரு பாடத்திற்கும் 4,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். இல்லையெனில் செய்முறைத் தேர்வில்"கை' வைத்து விடுவதாக மிரட்டுகின்றனர்.இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி