அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநிலம் தழுவிய பிரசார இயக்கம் நேற்று தொடங்கியது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் மணி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி, பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தனர்.இதுகுறித்து முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி கூறியதாவது: பத்தாம் வகுப்பு தேர்வில் மெட்ரிக் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் 2,700. ஆனால், 70 மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி பெறாதவர்கள் 700. அதேபோன்று மதிப்பெண் பெறுவதிலும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளை மிஞ்சி உள்ளனர். எனவே பொதுமக்கள் இதை உணர்ந்து, சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் தங்கள் குழந்தைகளை அரசு மற்றும் மாநகராட்சிபள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி