காலியிடங்கள் அறிவிப்பதில் தாமதம்: முதுகலை ஆசிரியர்கள் கொதிப்பு- தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2014

காலியிடங்கள் அறிவிப்பதில் தாமதம்: முதுகலை ஆசிரியர்கள் கொதிப்பு- தினமலர்

அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நற்று நடந்தது. காலியிடங்கள் குறித்த விபரம் வெளியிட தாமதம் ஆனதால் ஆசிரியர்கள் பரிதவித்தனர்.

முதுகலை ஆசிரியர்களுக்கான வெளிமாவட்ட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. சிவகங்கையில் காலை 10 மணிக்கு துவங்க வேண்டிய கலந்தாய்வு மதியம் 3 மணி வரை துவங்கவில்லை. கல்வித்துறை ஊழியர்கள் 'ஆன்-லைனில்' தயார் நிலையில் இருந்தும், காலியிட விபரம் வெளியிடப்படவில்லை. சொந்த ஊர் மாறுதல் கனவில் வந்த ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகம் முன் காத்துக்கிடந்தனர். ஒரு வழியாக 3 மணிக்கு மேல் கலந்தாய்வு துவங்கியது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆன்-லைன் இணைப்பில் தயார் நிலையில் இருந்தும் காலியிட விபரம் தெரியவில்லை. சென்னை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து காலியிடங்கள் அறிவித்தால் மட்டுமே, நாங்களும் ஆன்-லைனில் தெரிவிக்க முடியும்' என்றார். ஆசிரியர்கள் கூறுகையில், 'நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியை சேர்ந்த பலர், இம்மாவட்டத்தில் 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிகிறோம். கலந்தாய்வு நடக்கவே இவ்வளவு தாமதம் ஏற்படுகிறது. தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சில முக்கியமான இடங்கள் மறைக்கப்பட்டுள்ளன. காலியிடம் இருப்பது குறித்த தெரிந்தாலும் கேட்க முடியவில்லை. புதிய நியமனத்திற்காகவும் சில இடங்கள் மறைக்கப்படுகின்றன' என்றனர்.

8 comments:

  1. Indrudan trb sonna 20daymudiyud trb verum Poiseithiya solludu

    ReplyDelete
  2. TNTET 12ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது:
    கடந்த ஆண்டு அக்டோரர் மாதம் நடைபெற்ற TET தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும் வியாழன் அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும்,ஜூலை முதல் வாரத்தில் இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும்.இதில் இந்த ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பளிப்பதாகவும் ,மற்றும் இந்த ஆண்டிற்கான அறிவிப்பு ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியிடப்பட்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கல்விக்குரலின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.-more details www.tntam.in

    ReplyDelete
  3. Tntam ல் வெளிவந்துள்ள தகவல் ஆதாரமற்ற தகவல். ஏற்கனவே மன வேதனையில் இருக்கிறோம். தவறான தகவல்களை கொடுத்து ஏமாற்ற வேண்டாம்.

    ReplyDelete
  4. தினமும் ஒரு செய்தி .. மனதுக்கு கஷ்டத்தை தருகிறது. நொந்ததுந்தன் மிச்சம்.

    ReplyDelete
  5. தினமும் ஒரு செய்தி .. மனதுக்கு கஷ்டத்தை தருகிறது. நொந்ததுந்தன் மிச்சம்.

    ReplyDelete
  6. PG TRB FRINEDS COMMING FRIDAY (27/06/2014), NAMATHU KARUTHUKKALAI SATTASABAIYIL PESA DINDIGUL SELVI. BALA BHARATHI AMMAVIDAM MANNU KODUTHAL PLZ COME ALL TRB PG SELECTED CANDIDATES PLZ CONTACT PACKIARAJ 9150076653

    ReplyDelete
  7. Balabharathi is good assembly speaker. All tet candidates can bring their demands to her. She will speak in assembly. She is bold speaker.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி