ஆசிரியர் கலந்தாய்வு: இன்றும்கூடுதல் பணியிடங்கள் காட்டப்படுமா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2014

ஆசிரியர் கலந்தாய்வு: இன்றும்கூடுதல் பணியிடங்கள் காட்டப்படுமா

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று நடந்த பணிநிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன. இதனால், 'ஜூனியர்' ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிப்பது தவிர்க்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக உள்ள பணியிடங்கள் ஆண்டுதோறும் கணக்கிடப்படுகின்றன. இதன்படி கூடுதலாக (சர்பிளஸ்) உள்ள ஆசிரியர்கள், பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு 'பணிநிரவல்' அடிப்படையில் மாற்றப்படுவர். வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிக்கப்படுவதால், ஆசிரியர்கள் அச்சத்தில் இருந்தனர்.நேற்று, இதற்கான மாறுதல் கலந்தாய்வு நடந்தது. ஆனால் கலந்தாய்வு துவங்கியதும், 2014-15ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களும் சேர்த்து காண்பிக்கப்பட்டன; இதனால் 600 'சர்பிளஸ்' ஆசிரியர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படாமல், உள் மாவட்டங்களிலேயே பணியிடம் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 27) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இதிலும், நேற்று போல கூடுதல் பணியிடங்களை காண்பித்தால், அனைவருக்கும் உள்மாவட்டங்களிலேயே பணி கிடைக்கும்.இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறுகையில், 'சர்பிளஸ் ஆசிரியர்களை வேறு மாவட்டங்களுக்கு மாற்ற இருந்தது தவிர்க்கப்பட்டது மகிழ்ச்சி. அதேபோல் இன்று (ஜூன் 27) நடக்கும் பொறுமாறுதலிலும் கூடுதல் பணியிடங்கள் காண்பிக்க வேண்டும். அப்படி காண்பிக்கும் பட்சத்தில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 200 பணியிடங்கள் கூடுதலாக கிடைக்கும்' என்றனர்.

4 comments:

  1. காலியாக உள்ள அனைத்து பணி இடங்களை காட்டினாலே நன்றாக இருக்கும். சில சங்க நிர்வாகிகளே பணி இடங்கள் மறைக்கப்படுவதற்கு காரணமாக உள்ளனர்.

    ReplyDelete
  2. Varum viyalan yendrargal yethanai viyalano

    ReplyDelete
  3. வரும் வாராத்தில் தெரிந்துவிடும்.





    டிஇடி முடிவு என்னவென்று.

    ReplyDelete
  4. வாயை தான் கொஞ்சம் மூடி இருங்கள்...

    ஏங்கடா கிளப்புறீங்க....

    என் காது படவே சொல்கிறார் Ug trb என்று.
    உமக்கு எப்படி தெரியும் னு கேட்டா சொன்னார்கள் ங்கறது.
    புழுதியை புயலாக்குவதில் இவர்களுக்கு நிகர் இவரே.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி