பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு வாரம்: பள்ளி கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2014

பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு வாரம்: பள்ளி கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை.


பள்ளி கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
'அனைத்து வகை பள்ளிகளிலும், மழைநீர் சேகரிப்பு வாரம் கொண்டாட வேண்டும்' என, முதல்வர், உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜூன் 9 முதல், 13 வரை, 6 முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரிடையே, மழைநீர் சேகரிப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். வரும், 9ம் தேதி, பள்ளி அளவில், மழைநீர் சேகரிப்பு, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள பகுதியில், பேரணி நடத்த வேண்டும். ஜூன் 10 ல், 'மழைநீர்சேகரிப்பு, வளமான எதிர்காலம்' என்ற தலைப்பில், கட்டுரை போட்டியும், ஜூன் 11 ல், ஓவிய போட்டியும், ஜூன்13 ல் மாணவர்களை, 'புராஜக்ட்' செய்யவும், அறிவுறுத்த வேண்டும். மாவட்ட அளவில், 13ம் தேதி, கண்காட்சி நடத்த வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு, பரிசு வழங்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி