விளையாட்டுக்கு தனி நிதி ஒதுக்கீடு இல்லை: பள்ளி மாணவர்கள் பாதிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2014

விளையாட்டுக்கு தனி நிதி ஒதுக்கீடு இல்லை: பள்ளி மாணவர்கள் பாதிப்பு.


விளையாட்டுக்கென, பள்ளிக்கல்வி துறை சார்பில், தனியாக நிதிஒதுக்கப்படாததால், பள்ளிகள் சார்பில் மாணவர்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது.
பள்ளிக் கல்வித் துறை மூலம், விளையாட்டு, இளம்செஞ்சுருள் சங்கம், சாரணர், சாரணீயர் இயக்கம் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு சேர்த்து, பள்ளிகளுக்கு குறிப்பிட்ட தொகை அனுப்பப்படுகிறது. இதில் விளையாட்டுக்கு இவ்வளவு தொகை என, தனியாக குறிப்பிடுவதில்லை.ஆனால், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களாக இருந்தால், ஒருவருக்கு ஏழு ரூபாய்வீதம், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளிக் கல்வித் துறையில் இருந்து, பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 14 ரூபாய், பிளஸ் 1, பிளஸ்2 மாணவர்களுக்கு 21 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்தொகையை பிரித்து, குறுவட்ட, வட்ட, கல்வி மாவட்ட, மண்டலப் போட்டிகள் நடத்தும் பள்ளிகளுக்கு, தேவைக்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டும். பெரும்பாலான அரசுப் பள்ளிகள், போட்டி நடத்துவதற்கு, விளையாட்டு நிதியைத் தருவதில்லை. மாணவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்களும் வாங்குவதில்லை.மாணவர்களை போட்டிகள் நடத்தும் இடத்திற்கு அழைத்து செல்வதில், சுணக்கம் காட்டுகின்றனர். திறமையான ஏழை மாணவர்கள் போக்குவரத்து செலவுக்கு பணம் இல்லாததால், போட்டியில் பங்கேற்பதில்லை.

குறுவட்டப் போட்டிக்கு எட்டு கி.மீ., தொலைவுக்குள் பங்கேற்க சென்றால் காலை, மாலை சாப்பாட்டுக்கு 40 ரூபாய் தருகின்றனர். மண்டல, மாவட்ட போட்டிகளுக்கு 50 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இத்தொகைக்குள், மாணவர்களால் சாப்பிட முடிவதில்லை. மொத்தத்தில் விளையாட்டு என்ற பெயரில், உண்மையான திறமைகள் மறைக்கப்படுகின்றன.பள்ளிகளுக்கு விளையாட்டு நிதியை தனியாக அனுப்பி, விளையாட்டுஉபகரணங்கள் வாங்க, மாணவர்களை போட்டிக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தால் தான், சிறப்பான வீரர்களை உருவாக்க முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி