பணி ஓய்வு பெறுபவர்களுக்குமத்திய அரசு புது திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2014

பணி ஓய்வு பெறுபவர்களுக்குமத்திய அரசு புது திட்டம்.


அரசு ஊழியர்கள், பணியிலிருந்து ஓய்வுபெறும்நாளிலேயே, ஓய்வூதியம் வழங்குவது குறித்த அரசாணையை, ஊழியர்கள் பெறும் வகையில், புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய பணியாளர் நலன் மற்றும் குறைதீர் துறை இணைஅமைச்சர், ஜிதேந்திரா சிங் கூறியதாவது:அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் தாமதம் ஏற்படாமல் இருக்க, அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில், 'பென்ஷன் பேமென்ட் ஆர்டர்' எனப்படும், ஓய்வூதியம் குறித்த அரசாணையை, ஊழியர்கள் கையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பலன்களை தாமதம் இல்லாமல் வழங்க, இணையதள முறையில், ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் அதை சரிபார்க்கும், 'பவிஷ்யா' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; இதன் மூலம், லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன் அடைவர்.மாநில அரசு ஊழியர்களும் பயன்பெறும் வகையில், இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் விரிவுபடுத்துவது குறித்து, மாநில அரசு அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி