பென்ஷன்தாரர்களுக்கு வீட்டிலேயே பென்ஷன்:பிரதமர் மோடி அரசு நடவடிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2014

பென்ஷன்தாரர்களுக்கு வீட்டிலேயே பென்ஷன்:பிரதமர் மோடி அரசு நடவடிக்கை.


வயது முதிர்ந்த, நடக்க முடியாத பென்ஷன்தாரர்களுக்கு, அவர்களின் வீட்டிலேயே பென்ஷன் பணத்தை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

ஆலோசனை:

பென்ஷன் சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் தன் அலுவலகத்தில் இருந்தவாறு, அனைத்து மாநில செயலர்களையும் தொடர்பு கொண்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.அதன் படி, பென்ஷனுக்காக, பென்ஷன்தாரர்கள் அலுவலகங்களின் வாயிலில் காத்திருக்க வேண்டியதில்லை. குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், முதியோர், நடக்க முடியாதவர்களின் வீடுகளுக்கே சென்று, பென்ஷன் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இது குறித்து, மத்திய பணியாளர் பொதுமக்கள் குறை மற்றும் பென்ஷன் துணை இணையமைச்சர், ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது:ஓய்வுபெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், நீண்ட காலம் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், இந்த நடவடிக்கைஅவசியமாக உள்ளது.அமைப்பு ரீதியில்மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுபெறும் முன்னரே, ஓய்வு குறித்து தேவையான ஆலோசனைகள் வழங்க, அமைப்பு ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.இது போல், மாநில அரசுகள், தங்கள் மாநில ஊழியர்களுக்கு மேற்கொள்ள வேண்டும்.இதன் மூலம், எதிர்காலத்தில் ஓய்வுபெற உள்ள ஊழியர்களுக்கு போதிய ஓய்வூதிய அறிவு கிடைக்க வகை செய்யப்படும்.

விண்ணப்ப படிவங்களை எளிமையாக்குவது, நடைமுறைகளை வெளிப்படையாக செய்வது போன்றவற்றிற்கு இனிமேல் முக்கியத்துவம் கொடுக்கப்படும். மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, மனுவின் தற்போதைய நிலை என்பன போன்ற விவரங்களை, இணையதளம் மூலம் ஒவ்வொரு கட்டமாகஅறியும், 'பவிஷ்யா' என்ற திட்டம் ஏற்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு, அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.நாட்டில், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் பென்ஷன்தாரர்களும் உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி