மாவட்ட மாறுதலில் ஆசிரியர்கள் அலைக்கழிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2014

மாவட்ட மாறுதலில் ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.


இன்று மதியம் 3.50க்குஒரு குறுங்செய்தி வந்தது ஒரு ஆசிரியரிடமிருந்து,By AEEO என்று),அதில்மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்கள்  எல்லோரும் உடனே  கரூர் தாந்தோணிமலைஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து கையொப்பமிட்டு செல்ல வேண்டுமென்று,,
நானும் மற்ற ஆசிரிர்களுக்கு தகவலை சொல்லிவிட்டு கிளம்பினேன் இதில் இன்றுவிடுமுறை என்பதால் பல பெண் ஆசிரியர்கள் உடனே எப்படி  கிளம்ப முடியும் எனசொல்லிக்கொண்டாலும் என்ன செய்ய எப்படியாவது நம்ம சொந்த மாவட்டத்திற்குபோகவேண்டுமே என்ற அக்கறையுடன் கிளம்பினார்கள் ..சில ஆசிரியர்கள்பேருந்திலும் இரு சக்கர வானத்திலும் கிளம்பினோம்,,பார்த்தால் மாலை 4.35க்குஉதவித்தொடக்க கல்வி அலுவலர் சொன்னதாக மீண்டும் ஒரு SMSவந்தது இப்பொழுது வரவேண்டாம் நாளை காலை 9.00மணிக்குள் அந்தந்த உ.தொ.கல்விஅலுவலகம் வந்து sign பண்ணினால் போதுமாம் இப்பொழுது வரவேண்டாமாம் DEEOசொல்லிவிட்டார்களாம் .ஏன்  இப்படி அலையவிடுகிறார்கள் என புலம்பிக்கொண்டே பாதி தூரம் போனபின்புதிரும்பி வந்தோம் .ஏற்கனவே  பல ஆசிரியர்கள் பணம் கொடுத்து தங்களுக்குவிருப்பமான இடங்களுக்கு போய் விட்டார்கள் ,வெறும் கண்துடைப்புக்காக நடைபெறும் இந்த மாறுதல் கலந்தாய்வு ,கனவுக்காட்சிக் கலந்தாய்வுக்காக ஏன் ஆசிரியர்களை இப்படி பந்தாடுகிறார்களோநேர்மையான கலந்தாய்வு நடைபெற முதல்வர்  அவர்கள் கல்வித்துறைமீது தனிக்கவனம்செலுத்த வேண்டும் என்பதே எல்லா ஆசிரியர்களின் விருப்பமாகும்.
இரா.பாபு
தோகைமலை ஒன்றியம்
கரூர்.

5 comments:

  1. கலந்தாய்வு.பதவி உயர்வு என அனைத்துமே இதே அழகு தான்.அரசு பணி பலருக்கும் இங்கே கனவு வந்து பார்த்தால் தான் தெரியும் .ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் நாங்கள் ஒவ்வொரு admissionக்கும் படும் பாடு.அதிகாரிகள் எல்லா வேலைகளிலும் இப்படித்தான் செய்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. Punithamam satheesh sir entu neenga trb ku selkirarkala. Entu trbku sellum 5parukum annudaiya manamarntha vashutukal

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Is anyone wants sec grade mutual transfer from karur or namakkal to ramnad dt contact 9486693470

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி