கலந்தாய்வு துவங்குவதில் தாமதம்! அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2014

கலந்தாய்வு துவங்குவதில் தாமதம்! அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிப்பு


கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்வு ஆன் லைன் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

இதற்காக, மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் உள்ள, அரசு பள்ளிகளில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட வெளி மாவட்ட ஆசிரியர்கள் நேற்று காலை, 9:00 மணிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் குவிந்தனர். வெகு நேரமாகியும் கலந்தாய்வு துவங்காததால் ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், "காலை 9:00 மணிக்கு கலந்தாய்வு துவங்கும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், மாலை 5:00 மணி வரை துவங்காததால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால், ஏமாற்றம் அடைந்துள்ளோம். கலந்தாய்வு முடிந்த பிறகே வீட்டிற்கு செல்வோம்' என்றனர்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கம்ப்யூட்டரில் "சர்வர்' இணைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், குறிப்பிட்ட நேரத்திற்கு கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது."சர்வர்' இணைப்பு கிடைத்ததால் வட்டார வள மைய ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முடிந்து விட்டது. மற்ற ஆசிரியர்களுக்கும் படிப்படியாக இன்றைக்குள் (நேற்று) மாவட்டம் விட்டு மாறுதலுக்கான ஆணை வழங்கப்படும்' என்றனர்.

1 comment:

  1. Kadalur mattumall. Ella urilum than idhu nadakkirathu.
    Anna University pol kalanthaivu nada vendiyathuthane?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி