சமச்சீர் கல்விக்கு பதிலாக புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடதிட்டம் அமல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2014

சமச்சீர் கல்விக்கு பதிலாக புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடதிட்டம் அமல்.


புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் அரசு தொடக்கப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் தற்போது ஆங்கிலம், தமிழ் வழி கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்கள் தமிழக கல்வி வாரியத்துடனும், மாகி கேரள மாநில கல்வி வாரியம், ஏனாம் ஆந்திரா கல்வி வாரியத்துடன் இணைந்துள்ளது.

புதுச்சேரியில் கோடைவிடுமுறைக்கு பின் வரும் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் ஆங்கில வழி துவக்கப்பள்ளிகளில் அதாவது 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்திற்கு பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.இது குறித்து கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் ஆங்கில வழி கல்வியை பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும், தமிழ் வழி பள்ளிகளில் 1ம் வகுப்பு மட்டும் சிபிஎஸ்இ கல்வி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் பின்னர் படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் வகுப்புகள் அதிகரிக்கப்படும்.

இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது’என்றார். சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பதால் இந்தி மொழிப்பாடம் அவசியம் குறித்து கேட்ட போது, அந்தந்த மாநிலத்தில் உள்ள மொழியே மொழி பாடமாக வைத்துக்கொள் ளலாம். புதுச் சேரியில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகியவை மொழிப்பாடமாக இருக்கும். பெற்றோர் விருப்பப்பட் டால் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளை பாடமாக எடுத்துக்கொள்ளலாம்‘ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி