ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு: வகுப்பறைகளில் செல்போன் கூடாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2014

ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு: வகுப்பறைகளில் செல்போன் கூடாது.


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளி நிர்வாகங்கள் கடை பிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகளை கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதன் விவரம் வருமாறு:பள்ளி தொடங்கிய நாள் முதலே கால அட்டவணை சரியாக பின்பற்றப்பட வேண்டும்.

நடத்த வேண்டிய பாடம் குறித்து முறையாக குறிப்புகள் தயாரித்து மாணவர்களுக்கு புரியும்படி நடத்த வேண்டும். கற்பித்தலுக்காக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்கள், புரொஜக்டர்கள்,மைக்குகளை பயன்படுத்த வேண்டும். வகுப்பறைகளில் ஆசிரியர்கள் செல்போன் உபயோகிப்பதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. எனவே அவ்வாறு செயல்படும் ஆசிரியர்கள் மீது அரசு பணியாளர் நடத்தை விதிப்படி ஒழுங்கு நடவடிக்கைஎடுக்கப்படும். செல்போன்களை அதற்கென ஒதுக்கப்பட்ட அறைகளில் வைத்து விட்டு வகுப்பறைக்கு செல்ல வேண்டும். இதனை தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.மாணவர்களை அவர்களது உயரம், செவித்திறன், கண் பார்வை புலன் திறன் அடிப்படையில் வரிசைப்படி அமர வைக்க வேண்டும். ஒவ்வொரு ஆசிரியர்களும் கையில் பாடக்குறிப்பேடு வைத்திருக்க வேண்டும்.

தலைமையாசிரியர்கள் பள்ளிகள் துவங்குவதற்கு முன் அனைத்து வகுப்பறையிலும் மின்சார கசிவு, கட்டிட தன்மை, பூச்சிகள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்த பின்னர் மாணவர்களை அனுமதிக்க வேண்டும். மேற்கண்ட கட்டுப்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

4 comments:

  1. I ASK ONE QUESTION LAST YEAR LA MATHS LA 1500 CANDIDATE KU (OC,BC,BCM,MBC,SC,SCA,ST) POSTING POTTANGA.
    MY DOUBT MBC KU 20% =300 POSTING
    PODANUM ORUVELAI 200 CANDIDATE THAN PASS PANNI IRUNTHANGANA BALANCE 100 CANDIDATE INTHA YEAR LA ADD PANNUVANGALA?
    ANY ONE REPLY ?

    ReplyDelete
  2. Good decision taken by Educational department. But this restrictions not possible to implement every schools. Head Master should take action to implement some programs like use computer & projectors to show images and videos to students for science & social science subjects . if implement this programs students skills & creativity will develop. Teachers should be interest to teach students then only use of this circular will success...

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Where can we find out this G.O

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி