சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற விதவைகளுக்கு முன்னுரிமை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2014

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற விதவைகளுக்கு முன்னுரிமை.


சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என சமூக நலன் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.
சென்னை லயோலா கல்லூரியில் தமிழக விதவைப் பெண்கள் வாழ்வுரிமை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் பா.வளர்மதி பேசியது:பெண்கள் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.விதவைகள் மறுமணத்துக்காக உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.இதேபோல் சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் போதிய கல்வித்தகுதி இல்லாததால் பலர் பயனடைய முடியவில்லை.

கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு "ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டத்தின்படி' மாதம்தோறும் ரூ.500 ஆக வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகை தமிழக அரசால் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், 10-ஆம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பை முடித்த பெண்களுக்கு திருமணஉதவித்தொகையை அரசு வழங்கி வருகிறது.விதவைப் பெண்கள் முன்னேற்றத்துக்காக அரசு மேலும் செயல்படுத்த வேண்டிய கோரிக்கைகளை அளித்தால் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி