தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2014

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.


தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.

பணியிட மாறுதல்ஆண்டுதோறும் அரசு பள்ளி களில் பணிபுரியும் ஆசிரியர் கள் பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம். அவ்வாறு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைவிகிதத்தின் அடிப்படையில் ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் பணி நடைபெறும்.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. அதன் விவரம் வருமாறு:-இன்று உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிட மாறுதல் மற்றும்பதவி உயர்வு கலந்தாய்வு, நாளை(செவ்வாய்க்கிழமை) நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்பணியிட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, 18-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் கலந்தாய்வு நடக்கிறது.

மாவட்ட தலைநகரங்களில்...

இதேபோல், இன்று வட்டார வள மைய ஆசிரியர்களுக்கான பணி நிரவல் மற்றும் கலந்தாய்வு, 18-ந் தேதி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு, 19-ந் தேதி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு, 23-ந் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்குபணி நிரவல் மற்றும் கலந்தாய்வு, 24-ந் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பணி செய்வதற்கான கலந்தாய்வு, 26-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுகள் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும்.

3 comments:

  1. நல்லா நல்லா கலந்து ஆய்வுசெய்யுங்கோ ஆன வேலைமட்டும் செய்யாதீங்கோ

    ReplyDelete
  2. 40 மாணவன் னை சேர்க்க முடியலை உங்களுக்கெல்லாம் வேலை ஒரு கேடு

    ReplyDelete
  3. manasachi padi work panuga sir
    first unga vittu kuzhaiya govt school seruga aparam matha pasagala seppinga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி