Jun 6, 2014
Home
kalviseithi
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் - தினதந்தி
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் - தினதந்தி
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் பாட வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிப்பு
ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. பாடவாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் விவரம் கேட்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. காலிப்பணியிடங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் இடை நிலை ஆசிரியர் பணியிடங்கள் 2 ஆயிரமும், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 13 ஆயிரமும் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் கட்டமாக ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி முடித்தது. தேர்வு முடிவையும் வெளியிட்டது.
இதில் தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தளர்த்தி உத்தரவிட்டார். அதன்படி 150 மதிப்பெண்ணுக்கு 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெற்றதாகும். ஆனால் தேர்ச்சி பெற்றுவிட்டதால் ஆசிரியர் வேலை கிடைத்துவிடும் என்பது கிடையாது. மதிப்பெண் வெயிட்டேஜ் அவர்கள் பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண், ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மார்க் ஆகியவற்றின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் இடை நிலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்ய உள்ளது.
ஆசிரியர்களை தேர்வு செய்ய எப்படி மதிப்பெண் வெயிட்டேஜ் வழங்குவது என்று புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய மேற்கொண்ட அதே முறையுடன் கூடுதலாக பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்ணையும் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்தநிலையில் இந்த வருடம் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.அதனால் காலிப்பணியிடங்கள் புதிதாக எவ்வளவு அதிகரித்து உள்ளன என்பதை பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள். மேலும் பாட வாரியாக அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு முதலிய பாடங்களுக்கு வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எத்தனை உள்ளன என்று கணக்கிட்டு வருகிறார்கள். சட்டசபை கூட்டம் ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை காலியாக கிடக்கின்றன. எப்போது நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வருகிற சட்டசபை கூட்டத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் கட்டமாக இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி அதிக மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்வார்கள். பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியம் அந்த பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்க கல்வி இயக்குனரகம் ஆகியவற்றில் ஒப்படைக்கும். கல்லூரி ஆசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வு அடுத்த கட்டமாக கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நேர்முகத்தேர்வு நடத்தி பணி நியமனத்திற்கான ஏற்பாட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது.
Recommanded News
Related Post:
9 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
TET/MATHS CANDIDATES: REGISTER YOUR W'TAGE MARKS:http://tetmathsweightage.blogspot.in/
ReplyDeleteAiya trb makkaley school la computer science oru subject illaya.ethulayum computer science why ooram katurenga...cs b.ed mudichavanga nilama puriyatha...veyra entha subject ku 1000 case irunthalum ethayum porutpaduthama posting podurenga...tet,trb la iruntha ella case mudichu posting podura work veygama seirenga...athey pola cs ku posting podurathu avolo periya vishayam illayey...cs padichavanga innum thongitu irukathenga
ReplyDeleteSir PG ikku eppa process panni posting poduvanga
ReplyDeleteapplication submit pandrathukkum, fees pay pandrathukku matum DATE kuduthudunga !!!
ReplyDeleteaanaa ? result yeppa varum yeppidi varum, illa varuma ? varatha ? apdinu detail mattum sollidatheenga nalla varum intha TRB & TNPSC
my weightage is 68.567community BC major PHYSICS any chance to me
ReplyDeleteமிகமிக நல்ல முடிவு
ReplyDeleteஆன் லைனில் தேர்ச்சி சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு இருப்பது நல்ல முடிவு. சென்ற ஆண்டு தகுதி வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு வருடம் கழித்தே சான்றிதல் வழங்கப்பட்டது.அப்படி பார்த்தால் அந்த சான்றிதல் 6 ஆண்டுகளுக்கு தான் செல்லும். இந்த ஆண்டு தேர்வு நடைபெற்று சுமார் 10 மாதங்கள் முடிந்து விட்டது இன்னும் சான்றிதல் சாரிபார்ப்பு நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.மேலும் பல மாதங்கள் கழித்து தேர்ச்சி சான்றிதழ் வழங்கப் படுகிறது இதற்கு தேர்வின் நுழைவு சீட்டு தேவை. எனவே ஆன்லைனில் தேர்ச்சி சான்றிதழ் வழங்கினால் தேர்ச்சி பெற்றவர் வெளி இடம்/மாநிலத்தில் இருந்தலும் பெற்றுக்கொள்வது சிரமம் குறைகிறது. எனவே ஆன் லைனில் தேர்ச்சி சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு இருப்பது மிகமிக நல்ல முடிவு.
அன்பார்ந்த தமிழ் ஆசிரியர்களே, வணக்கம்.
ReplyDeleteநான் D.T.Ed(86.9%) B.Lit., MA, B.Ed(77%) M.Ed., முடித்துள்ளேன். தாள் 2 ற்கான சான்றிதழ் சரிபார்ப்பின் போது B.Lit + B.Ed., னை காண்பித்தேன். இதனால் எனது new weightage 63.71 வருகிறது. ஆனால், D.T.Ed + B.LIT., காண்பித்திருந்தால் எனக்கு 65.07 weightage, வந்திருக்கும். தற்போது மாற்றுவது குறித்து TRB யிடம் கேட்டபோது, வரும் திங்கட்கிழமை(09/06/2014) நேரில் வந்து கேட்குமாரு கூறினார்கள். தாங்கள் யாரேனும் இது போன்று பாதித்திருந்தால் TRB க்கு phone செய்து பார்த்துவிட்டு, TRB அலுவலகம் சென்று நேரிலேயே கேட்டுப்பார்ப்போம். முயற்சி செய்வோம், மாறினால் நன்மைக்கே.
My Mobile no.: 94425 23819(K.DURAI)
special tet result eppa varum.athuku cv eppa nadakkum.
ReplyDeleteIpa ella edathulayum computer knowledge iruka nu kekuranga atha basic la irunthu therinchikanumna comupter pathina visayangal theriyavendiayathu iruku and matriculation, CBSE la primary class irunte students ku computer oru subject ah iruku athumathum ilama technology improvement aga computer than important nu ellarukume theriyum ana atha pathi therinchika ithukune institute ku poi padikavendiyathu iruku ila cbse and marticulation la padikavendiyathu iruku athula padika vasathi ilathavanga ena pannuvanga athuku pathila inthe governmnet primary la irunthe computer oru subject ah konduvantha students knowledge improve akum and b.ed , m.ed computer science padicha techers ku jobs kidaikum. so pls government primary la irunthe computer science oru subject ah konduvaranumnu nan matum ila nerya children and yongster asapaduranga
ReplyDelete