போதிய ஆசிரியர் இல்லாததால் ஆங்கில வழி கல்வி திட்டத்திற்கு சிக்கல்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2014

போதிய ஆசிரியர் இல்லாததால் ஆங்கில வழி கல்வி திட்டத்திற்கு சிக்கல்...


ஆங்கில வழிக் கல்வியை செயல்படுத்தியுள்ள அரசு பள்ளிகளில், போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகம் செய்த அரசு, தகுதியான ஆசிரியர்களையும் உடனடியாக நியமிப்பது அவசியம். உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர்.அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் விரும்பினால், ஆங்கிலக்கல்வி முறையை துவக்கிக்கொள்ளலாம் என்ற மாநில அரசின் அறிவிப்பின்படி, உடுமலையில் 12, குடிமங்கலத்தில் 4 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.ஆங்கில வகுப்புகள் நடக்கும் அனைத்து பள்ளிகளிலும், கூடுதல் ஆசிரியர்கள் இல்லாததால், ஆங்கில வகுப்புகள் மட்டுமின்றி அனைத்து பாட வகுப்புகளும் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பிற வகுப்புகளுக்கான ஆசிரியர்களே ஆங்கில பாடங்களையும் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், கற்பித்தலில்சிரமம் இருப்பதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.பெரும்பாலான ஆரம்ப பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர். பிளஸ் 2 முடித்து விட்டு ஆசிரியர் கல்வி பட்டயபடிப்புகளை முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்களால், பெற்றோரின் நுனி நாக்குஆங்கில எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியுமா என்பது சந்தேகமே.பி.எட்., படிப்பில் ஆங்கிலத்தை முதன்மை பாடமாக படித்த இளநிலை பட்டதாரி ஆசிரியர்களால் மட்டுமே, மாணவர்களுக்கு முழுமையான ஆங்கில அறிவை வளர்க்க முடியும் என, கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டே ஆங்கில வகுப்புகள் துவங்கப்பட்ட பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது. இதனால் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதோடு, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதும் தடைபட்டுள்ளது.பள்ளிகள் செயல்பட துவங்கிய சில நாட்களிலேயே இதுபோன்ற பிரச்னைகள் உருவாகி இருப்பது, அரசு பள்ளிகளின் மீது பெற்றோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.

பெற்றோர் சிலர் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் மட்டுமே ஆங்கில கல்வி முறை செயல்படுத்தபட்டுள்ளதோ என சந்தேகிக்க வேண்டியதுள்ளது. ஆங்கில வகுப்புகளில் ஆர்வமுடன் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர் பற்றாக்குறையால் வகுப்புகள் தடைபட்டு ஏமாற்றம் அடைந்துள்ளனர். விரைவில் போதுமான எண்ணிக்கையில், தகுதியான ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

விரைவில் நியமனம்:

இது குறித்து உடுமலை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "ஆங்கில வகுப்புகள் நடத்த, பிற ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகள் குறித்தவிபரங்கள், கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

12 comments:

  1. English Major candidates anaivarukkum job kidaikka en manamarntha vazhthukkal

    ReplyDelete
    Replies
    1. aanaivar sarpagavum manikandan sir ku thank u..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Manikandan sir adhu english subject nadatha ila.english meadiem.so all subjectum nadathanum.

      Delete
  2. In english teachs weightage below 65? , 65 to 67 see saw position ,68 above chnce above 70 sure job

    ReplyDelete
  3. Sunil Prathap Sir......

    I have replied ur mail, sorry for late reply!!! Jus nw saw ur mail.

    ReplyDelete
    Replies
    1. என்னாச்சு சிங்கத்த சில நாளாக பார்க்க முடியல ?????

      Delete
    2. Ram anna..

      Unmaya sonalum, thapa thattiketalum, inga dhan comment ah delete panrangalae.. Thapu panavangala kekala, ipo avanga pakkam pakkama pota comment elam GO moolam kadavulae delete pana madhiri agiduchu.. Mathapadi onum ila anna..

      Thanx for ur care na..

      Delete
    3. Avargal mana kumural,vethanai ya nammidam kaattamal arasu, needhi mandram moolam theervu kaanpathe siranthathu.
      2012 nanbargal rlx kidayathu nu neethi mandram sonnathum yeappadi neethiku thalai vanangi yeatrargalo adu pola , entha mudivaanalum naam etru kolla thayar.antha mana urudhi nammidam undu.

      Delete
    4. Ama anna, edu vandalum face pana dhairiyamum, mana urudiyum irukumbodu problem kuda kita vara yosikum!!! Relaxation oruthar vara inimael endha changes yum varadu na.. Case katta kuda pirikama thalli vechu dispose panuvanga, neenga vena paarunga!

      Delete
  4. முதலில் ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கு ENGLISH MEDIUM புத்தகம் கொடுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி